சட்டவிரோத வணிகக் கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
17 Jun 2026, 9:30 pm
<p><strong>சட்டவிரோத வணிகக் கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்</strong></p><p>மதுரை, ஜூன் 17- ஆனைமலை புலிகள் காப்ப கத்தில் இணைக்கப்பட்டுள்ள கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிகக் கட்டிடங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆனை மலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தர விட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதி விரிவுபடுத்தப்பட்டு கொடைக்கா னல் மற்றும் திண்டுக்கல் வனப் பிரிவுகளின் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளனர். பூண்டி கிராமம் முதல் மன்னவனூர், கூக்கால் வழி யாக ஆண்டிப்பட்டி வரை இந்தப் பகுதி பரவியுள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளனர். தேசிய வனவிலங்கு வாரி யத்தின் முன் அனுமதி பெறாமல் இந்தப் பகுதிகளில் விடுதிகள், உண வகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்கள் அமைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், மன்னவனூர் பகுதியில் பல கட்டிடங்கள் முறையான அனு மதியின்றி கட்டப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிகக் கட்டி டங்களை அகற்றி, அந்தப் பகு தியை இயல்பான சூழலுக்கு மீட்டெ டுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரி யிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் ஜோதிராமன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், வணிக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் தினந்தோறும் கேம்ப் ஃபயர் மற் றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படு வதாகவும், அவை அனுமதியின்றி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப் பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆனைமலை புலி கள் காப்பக தலைமை வனப் பாது காவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், சரணாலயப் பகுதிக்குள் செயல்படும் தனியார் விடுதிகளில் இனிமேல் கேம்ப் ஃபயர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த னர். பின்னர் வழக்கை வனவியல் தொடர்பான வழக்குகளை விசா ரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஒத்திவைத்தனர்.</p>
