தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இலவம்பேடு ஏரி ஆக்கிரமிப்பு: வெள்ள அபாயத்தை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்

15 Jul 2026, 11:26 pm
இலவம்பேடு ஏரி ஆக்கிரமிப்பு: வெள்ள  அபாயத்தை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்
<p><strong>இலவம்பேடு ஏரி ஆக்கிரமிப்பு: வெள்ள அபாயத்தை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 15- திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரி அருகே உள்ள இலவம்பேடு கிராமத்தில், எஸ்ஏஎஸ் என்ற தனியார் நிறுவனம் ஏரி கால்வாய்களை ஆக்கிரமித்ததால் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரும் பொதுமக்களும் வரும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடு பட உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சிறுவாக் கம் ஊராட்சிக்கு உட்பட்ட இலவம்பேட் டில் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்ஏஎஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விவசாய நிலங்களை வாங்கி குடோன் அமைத் துள்ள நிலையில், சிறுவாக்கம் ஏரி யின் மூன்று முக்கிய கால்வாய் களை சுமார் 32 சென்ட் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து அடைத்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதனால் மழை க்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி, இலவம்பேடு, சிறுவாக் கம், சாணார்பாளையம் மற்றும் புதுப் பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து விடுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த சிறுவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ராதிகா சேகர், அரசு அதிகாரிகளின் துணையுடனேயே இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக வும், பலமுறை புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதன் காரண மாக ஆண்டுதோறும் 300 ஏக்கர் நெற் பயிர்கள் நாசமடைவதாகவும், தவெக அரசு இதில் தலையிட்டு ஆக்கிர மிப்பை அகற்றி, சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இலவம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராதாரவி மற்றும் விவசாயி எஸ்.செல்வகுமார் கூறுகையில், பல ஆண்டுகளாக தாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், கடந்த ஆட்சி யில் பலமுறை மனு கொடுத்தும் பயனி ல்லை என்றும் வருத்தம் தெரிவித்த னர். மழைக்காலம் தொடங்கும் முன்பே போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கமலா, சாந்தி, நீலவதி, கல்யாணி, சாவித்திரி மற்றும் சம்பூர் ணம் ஆகிய பெண்கள், வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்து குடும்பத்துடன் வெளியேறும் அவல நிலை நீடிப்ப தாகக் கூறினர். மேலும், சாணார்பாளை யம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இலவம்பேடு கிராம மக்களும் இணைந்து ஜூலை 16-ஆம் தேதி எஸ்ஏஎஸ் நிறுவனத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். - பெ.ரூபன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.