முந்தய பக்கம்

இளமங்கலத்திற்கு பேருந்து வசதி விதொச போராட்டத்தால் தீர்வு

1 Oct 2026, 2:02 am
இளமங்கலத்திற்கு பேருந்து வசதி விதொச போராட்டத்தால் தீர்வு
<p><strong>இளமங்கலத்திற்கு பேருந்து வசதி விதொச போராட்டத்தால் தீர்வு</strong></p><p>கடலூர், செப்.30-கடலூர் மாவட்டம் திரு முட்டம் வட்டம் இளமங்கலம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதி யின்றி மருத்துவமனை, பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் ச.பிரகாஷ் தலைமையில் விருத்தா சலம் பேருந்து பணிமனை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.</p><p>பின்னர் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சங்கரய்யா, வட்டக் குழு உறுப்பினர்கள் செந்தில், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், இளமங்கலத்திற்கு உடனடியாக பேருந்து இயக்கவும், சாலை ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப் படையில் அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram