தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடதுசாரிகளைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தாரா இளையராஜா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

11 Jul 2026, 10:09 pm
இடதுசாரிகளைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தாரா இளையராஜா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

இடதுசாரிகளைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தாரா இளையராஜா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

சமீபத்தில் சமூக வலைத் தளங்களில் உலா வந்த இசை ஞானி இளையராஜா குறித்த செய்தி, இரண்டு வெவ்வேறு விதமாகத் திரித்து விவாதிக்கப் பட்டது. ஒன்று, காணொ லியாக இளையராஜாவிடம் ஊடகவிய லாளர் சமஸ் எடுத்த நேர்காணலின் ஒரு சிறு துண்டுப் பகுதி. மற்றொன்று, இணையத்தில் போஸ்டராக வந்த செய்தி. இந்த இரண்டுக் கும் இடையே உள்ளடக்க ரீதியாக பெரும் வேறுபாடுகள் உள்ளன.

காணொலியில் இளையராஜா சொல்லியிருப்பது என்ன?

“நான், அமர் (கங்கை அமரன்), பாஸ்கர் ஆகியோர் நாடகங்களுக்கு இசையமைக்கும் முடிவோடு மதுரைக்கு வந்தோம். அப்போது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஐ. மாயாண்டி பாரதியிடம் அவருடைய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்குக் கேட்டோம். அதற்கு அவர் ‘கட்சியில்தான் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது எனக்குத் தோன்றியது... நாம் இந்த இயக்கத்திற்காக இவ்வளவு உழைத்தி ருக்கிறோம். வாடகைக்குத்தானே யாரிடமா வது விடப்போகிறார், நம்மிடம் கொடுத்தால் என்ன? நாமும் வாடகைதானே கொடுக்கப் போகிறோம்? ஆனால், நமக்கு வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான், நம்மை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்; யாரையும் நம்பிப் பலனில்லை என்ற வருத்தத்தில் மதுரையை விட்டுச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தோம்” என்று இளையராஜா கூறியிருக்கிறார். இன்னொன்று, இணையத்தில் துண்டுப் படமாக (Poster) வந்தது. அதில் இளையராஜா, ஐ. மாயாண்டி பாரதி இருவருடைய படங்களை யும் போட்டு, “கம்யூனிஸ்ட் தலைவர் ஐ. மாயாண்டி பாரதி, சாதி பார்த்து எங்களுக்கு வீடு தர மறுத்துவிட்டார்” என்கிற பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. இந்த இரண்டில் இளையராஜாவின் நேரடிப் பேட்டி மட்டுமே உண்மை. இரண்டா வதாக வந்த அந்தச் சிறு படம் என்பது, நூறு சதவீதம் திட்டமிட்ட முறையில் இடதுசாரிகளின் மீது நடத்தப்பட்ட வன்மப் பிரச்சாரமும் அப்பட்டமான பொய்ச் செய்தியுமாகும்.

நேர்காணலின் பின்னணியும் ஊடகச் சூழ்ச்சியும்

காலம் காலமாக ஒரு சில ஊடகவியலா ளர்கள், இளையராஜாவுக்கும் பொதுவுடைமை இயக்கங்களுக்கும் ஆகாது என்பது போலச் சிண்டு முடிந்து கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் சமஸ். இந்த நேர்காணல், இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைய மைத்துவிட்டு வந்த பிறகு எடுக்கப்பட்டது. அதில் “மதுரையில் என்ன நடந்தது?” என்று இளையராஜாவிடம் சமஸ் தூண்டித் துருவிக் கேட்கிறார். இளையராஜா அந்தப் பழைய நினைவைக் கடந்து போக நினைத்தா லும், “இல்லை சொல்லுங்கள்” என்று சமஸ் வற்புறுத்திக் கேட்ட பின்புதான், இளையராஜா தனக்கு ஏற்பட்ட அந்தத் தனிப்பட்ட வருத்த சம்பவத்தைச் சொல்கிறார். இடதுசாரிகளுக்கு எதிராக இளையராஜா வைத் திருப்புவதில் அந்த ஊடகவியலாளர் ஏதோவொரு ஆனந்தம் காண்கிறார் என்பது இதில் தெளிவாகிறது. எனினும், அந்த நேர்காணலில் இளையராஜா ஒரு இடத்தில் கூட, “சாதி பார்த்து எங்களுக்கு ஐ. மாயாண்டி பாரதி வீடு தர மறுத்தார்” என்று சொல்லவே இல்லை. எப்போதும் இடதுசாரிகள் சாதிக்கு எதி ராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் சமரச மின்றி களமாடக்கூடியவர்கள்; அதற்கு யாரிட மிருந்தும் தனியாகச் சான்றிதழ் தேவை யில்லை. இது இடதுசாரிகளுக்கு எதிராக இளைய ராஜாவின் ரசிகர்களைத் திருப்ப முயலும் அதிதீவிர வலதுசாரிகளின் பித்தலாட்டம். எந்தவொரு காலத்திலும் இளையராஜா சாதி குறித்தோ, தீண்டாமை குறித்தோ பொதுவெளி யில் தவறாகப் பேசியதில்லை. ஸ்ரீவில்லி புத்தூர் ஆலயத்திற்குள் அவரை அனு மதிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தபோது கூட, சமூகச் செயல்பாட்டாளர்கள் பொங்கி யெழுந்த நிலையிலும் அவர் அமைதி காத்துத் தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தியவர்தான்.

இடதுசாரி இயக்கங்களில் இளையராஜாவின் ஆணிவேர்

இடதுசாரி இயக்கங்களில் இளையராஜா வின் பங்கு மகத்தானது. இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராசன், இடதுசாரி இயக்க மேடைகளில் புரட்சிகரப் பாடல்களைப் பாடியவர்; மக்கள் பிரச்சனைகளை உடனடி யாக மேடையிலேயே இட்டுக்கட்டிப் பாடும் அசாத்திய ஆற்றல் வாய்ந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு இளையராஜாவும் பாவலரின் பாடல் குழுவில் அதிகாரப்பூர்வ மாகச் சேர்கிறார். அவரோடு அண்ணன் பாஸ்கர், தம்பி அமர் ஆகியோரும் இணைந்து கொண்டு, தமிழ்நாடு மற்றும் கேரளம் முழுவதும் கம்யூனிஸ்ட் மேடைகளுக்காகப் பயணிக்கிறார்கள்.

இளையராஜா தனது அந்த நேர்காண லிலேயே அதனைப் பதிவு செய்துள்ளார்:

“என்னுடைய முதல் கச்சேரி திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் நடந்தது. அங்கே ஏறத்தாழ 50,000 பேர் கூடியிருந்த அந்த மாபெரும் திடலில், முதன்முதலாக வாசித்த அந்த அனு பவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது; மக்கள் எங்களை அள்ளி அணைத்துக் கொண்டாடினார்கள். இதேபோல, ஒவ்வொரு நாளும் நகரம், கிராமம் என்று பார்க்காமல் கம்யூனிஸ்ட் இயக்க மேடைகளில் கச்சேரிகள் செய்தது எங்களுக்கு மிகப்பெரிய இசை ஆளுமை அனுபவத்தைக் கொடுத்தது. அதுவும் ஒரு ஆண்டுக்கு முன்னூறு கச்சேரி கள் வரை செய்திருக்கிறோம்.” “இந்த மகத்தான அனுபவம் தமிழ்த்திரை இசையமைப்பாளர்களில் வேறு யாருக்கும் வாய்க்காதது” என்று அவரே பெருமையோடு இதற்குச் சாட்சியாகச் சொல்லியிருக்கிறார். ஐ. மாயாண்டி பாரதி பற்றிக் குறை சொன்ன அதே இளையராஜா, இந்த இடத்தில் இடது சாரிகளால் தனக்கு வாய்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசை அனுபவங்களையும் சொல்ல மறக்கவில்லை.

ஐ. மாயாண்டி பாரதியும் கம்யூனிஸ்ட் இயக்க நடைமுறையும்

தோழர் ஐ. மாயாண்டி பாரதி உழைக்கும் மக்கள் மீது அளப்பரிய அக்கறை கொண்ட ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்; ஒப்பற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவர். கட்சியே தன் வாழ்க்கை என்று வாழ்ந்தவர். இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, மக்கள் போராட்டங்களுக்காகப் பதினைந்து ஆண்டு கள் சிறை வாழ்க்கை வாழ்ந்த தியாகச் செம்மல். அவர் இளையராஜாவிடம் “கட்சியைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்” என்று கூறியதில் இடதுசாரி இயக்கங்களின் கட்டுக் கோப்பான நடைமுறை உள்ளது. கட்சியின் முழுநேர ஊழியர்கள், எப்போதுமே தனிநபர் நலனைத் தாண்டி கட்சியின் கூட்டு நலனை முன்வைத்துத்தான் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, 1960களின் காலகட்டம் என்பது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட வர லாற்றுச் சூழலாகும். அந்தக் கடுமையான காலகட்டத்தில், கட்சியே தன் மூச்சு என்றி ருந்த ஐ. மாயாண்டி பாரதி, “கட்சியைக் கேட்டுத் தான் சொல்ல வேண்டும்” என்ற பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்ததில் எந்தத் தவறும் இல்லை.

அந்த அறையில் குடியிருந்தது யார்? மறைக்கப்பட்ட உண்மை!

அடுத்து இளையராஜா சொல்வது, “இன் னொருவருக்கு விடப்போகும் அறைதானே, நாங்களும் வாடகைதானே கொடுக்கப் போகிறோம், கொடுத்தால் என்ன?” என்பது போல் இருந்தது. ஆனால், வரலாற்று உண்மை என்னவென்றால், இளையராஜா சொன்னது போல் ஐ. மாயாண்டி பாரதியின் வீட்டின் அந்தச் சிறிய அறை சும்மா காலியாகக் கிடக்கவில்லை; ஏற்கெனவே வேறொருவர் அதில் வசித்துக் கொண்டிருந்தார். அப்படி அந்த அறையில் குடியிருந்தவர், தோழர் கே.பி. ஜானகியம்மாள்! அவர் ஐ. மாயாண்டி பாரதியைப் போலவே இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் ஏழை மக்களுக்காகப் போராடிக் களத்தில் நின்று சிறை சென்ற ஒப்பற்ற வீரப் பெண்மணி. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முதன்மை நிறுவனர்களில் ஒருவர்; இளைய ராஜா தன் வாழ்வில் முதன்முதலாக ஏறிய அந்தத் திருவெறும்பூர் விவசாயிகள் சங்க மாநாட்டின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்! அத்தோடு அன்றைய மேடை நாடக உலகில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த கலைஞர். அன்றைய காலத்து மகாக் கலைஞனான எஸ்.எஸ். விஸ்வநாததாஸை, சாதியத் தீண்டாமையைக் காரணம் காட்டி அவரோடு மேடையில் நடிக்கப் பல முன்னணி நடிகை கள் மறுத்தபோது, துணிச்சலுடன் அவரோடு இணையாக மேடையில் நடித்தவர் கே.பி. ஜானகியம்மாள். தீண்டாமைக்குச் சவுக்கடி கொடுத்து அந்தக் கலைஞரைக் கைதூக்கி விட்டவர்களில் ஒப்பற்ற தலைவராக விளங்கி யவர். அப்படிப்பட்ட தியாகச் செம்மல் ஜானகி யம்மாள் தங்கியிருந்த அந்தச் சிறிய அறை யிலிருந்து, ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் வேறொருவரைக் குடிவைப்பது எந்த விதத்தில் முறையாகும் என்கிற தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது. கே.பி. ஜானகியம்மாள் அந்த அறையில் குடியிருந்ததற்கான சாட்சியங்களைத் தன்னு டைய முகநூல் பக்கத்தில் விரிவாகப் பதிவு செய்தவர் மார்க்சிய அறிஞரான தோழர் எஸ்.ஏ. பெருமாள். இவர் இளையராஜாவின் சமகாலத்துத் தோழராக இன்றும் நம்மோடு வாழும் மாபெரும் சாட்சியாக விளங்குபவர். மதுரையில் இளையராஜாவுக்குத் தெரியாத அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்க ளா இல்லை? அதோடு, அவரோடு அன்றும் இன்றும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிற ஆர். செல்வராஜ், தோழர் பி. ராமமூர்த்தி மற்றும் தோழர் சங்கரய்யாவின் நெருங்கிய உறவினர்தான். அவரிடமோ, மற்ற தோழர்க ளிடமோ கேட்டு வேறொரு வீட்டில் அவர்கள் எளிதாகக் குடியேறியிருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாகக் காட்டுவது என்பது, இடதுசாரிகள் மேல் அவருக்குள் இருக்கும் ஏதோவொரு சிறு தனிப்பட்ட மனக்குறையைக் காட்டுகிறதே தவிர வேறில்லை.

சூழ்ச்சி எடுபடாது

ஊடகவியலாளர்கள் சிலர் இந்தச் சிறிய சம்பவத்தை வேண்டுமென்றே ஊதிப் பெருக்கி, இடதுசாரிகளுக்கு எதிராகப் பரப்பு ரை செய்கிறார்கள். மதுரையை விட்டு இளைய ராஜா சென்னைக்கு வருவதற்கு அன்றைக்கு அது ஒரு மிகச் சிறிய காரணமாக இருந்தி ருக்கலாம்; அல்லது இளையராஜாவுக்கான அந்த இளமைத் துடிப்பும் அன்றைய புறச் சூழ்நிலைகளும் காரணமாக இருந்திருக்க லாம்.

இடதுசாரிகளின் மேடைகளில் வார்த்தெ டுக்கப்பட்ட இளையராஜா என்ற உன்னதக் கலைஞன்தான், பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘சிம்பொனி’ இசையிலும் நம் மண்ணின் தூய்மையான நாட்டுப்புற மண்ணிசையைச் சேர்க்க மறக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, ஒரு சில அதிதீவிர வலதுசாரிச் சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒருபோதும் எடுபடாது. ஏனெனில் இளையராஜா மட்டுமல்ல, இன்றைக்குத் தமிழ் கலை உலகில் உச்சம் தொட்டிருக்கும் பல உன்னதக் கலைஞர் கள் இடதுசாரி மேடைகளால் வெளிச்சத்திற்கு வந்தவர்கள்தான். இளையராஜாவின் இசை வரலாற்றை, இடதுசாரி இயக்கங்களை முழு மையாக ஒதுக்கிவிட்டு ஒருபோதும் எழுதிவிட முடியாது!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.