முந்தய பக்கம்

மாமல்லன் அணைத் திட்டம் நீரியல் ரீதியாகச் சாத்தியமானது சென்னை ஐஐடி

7 Jul 2026, 10:52 pm
மாமல்லன் அணைத் திட்டம் நீரியல் ரீதியாகச் சாத்தியமானது சென்னை ஐஐடி
<p><strong>மாமல்லன் அணைத் திட்டம் நீரியல் ரீதியாகச் சாத்தியமானது சென்னை ஐஐடி </strong></p><p>சென்னை, ஜூலை 7 - சென்னையை அடுத்த கோவளம் உப-வடிநிலப் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள மாமல்லன் கடலோர நீர்த்தேக்கத் திட்டம் (Mamallan coastal reservoir project), 1.655 டிஎம்சி மழைநீரைச் சேமிப்பதற்கு நீரியல் ரீதியாகச் சாத்தியமானது என்று சென்னை ஐஐடி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக வெள்ளப் பாதிப்பு மாதிரிகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த சில பரிந்துரைகளையும் ஐஐடி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு அமர்வில் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவுடன் இந்த ஐஐடி-யின் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram