சென்னை விரைவு செய்திகள்
28 Sept 2026, 12:49 am

டீப்டெக் ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.450 கோடி நிதி திரட்டல் அறிவிப்பு

சென்னை, செப்.27-இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்ப (டீப்டெக்) ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கவும், நாட்டின் தொழில்நுட்ப சுயசார்பை வலுப்படுத்தவும் சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க் தனது புதிய மூலதன நிதியை ரூ.450 கோடியுடன் முதற்கட்டமாக நிறைவு செய்துள்ளது. பாதுகாப்பு, விண்வெளி மற்றும் செமிகண்டக்டர் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் இந்த நிதியை ரூ.1,000 கோடியாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்கள், குவாண்டம் பயன்பாடுகள், லித்தியம்-அயன்

மின்கலங்கள் மற்றும் காற்றுத் தூய்மைப்படுத்தும் அமைப்புகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹாத்தார், குவான்ஸ்ட்ரா, டிரையோல்ட் எனர்ஜி மற்றும் கார்பெலிம் ஆகிய நான்கு ஸ்டார்ட்அப்களில் ஐஐடி மெட்ராஸ் ரூ.55 கோடியை முதலீடு செய்கிறது.

மூன்று மாதங்களில் இந்த முதற்கட்ட இலக்கை எட்டியுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார். ஐஐடி-எம் உடன் இணைந்து ஆரம்பகட்ட நிறுவனங்களுக்குத் தேவையான மூலதனம் வழங்கப்படும் என்று யுனிகார்ன் இந்தியா வென்ச்சர்ஸ் நிர்வாகி பாஸ்கர்மஜும்தார் குறிப்பிட்டார். ‘ஐஐடி-எம் யுனிகார்ன் ஃபிரண்டியர் ஃபண்ட்-1’ மூலம் 25 ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதோடு, முக்கியமான துறைகளில் இந்தியாவின் சுயசார்பை உறுதிப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் குழும முதன்மை செயல் அதிகாரி நடராஜன் மலுபிள்ளை தெரிவித்தார்.

போக்குவரத்துத் தடுப்புகளைச் சேதப்படுத்திய

3 பெண்கள் கைதுசென்னை, செப்.27-சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுபோக்குவரத்துத் தடுப்புகளைச் சேதப்படுத்திய சேத்துப்பட்டு,ஷெனாய் நகர் மற்றும் கொளத்தூரைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் செய்த அத்துமீறலின் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, அன்னாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வாகனப் பதிவு எண் மூலம் அவர்களைக் கண்டறிந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எச்சரிக்கையுடன் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மின்சாரம் பாய்ந்து புலம்பெயர் தொழிலாளி பலி

சென்னை, செப்.27-சென்னை பாடி அருகே கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தற்செயலாக மின்மாற்றி மீது விழுந்து மின்சாரம்தாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (28) என்ற கட்டுமானத் தொழிலாளி, கடந்த செப்டம்பர் 21 அன்று

இரவு மது அருந்திவிட்டு, தான் தங்கியிருந்த வீட்டின் இரண்டாவது மாடி படிக்கட்டு அருகில்நின்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து அருகில் இருந்த மின்மாற்றி மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில்உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.