தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயர்கல்வி நிறுவனங்களா? ஒடுக்கப்பட்டோரின் மயானமா?

30 Sept 2026, 10:32 pm
உயர்கல்வி நிறுவனங்களா? ஒடுக்கப்பட்டோரின் மயானமா?

உயர்கல்வி நிறுவனங்களா? ஒடுக்கப்பட்டோரின் மயானமா?

இந்தியாவின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-கள், நாட்டின் அறிவுப் பெருமையாகக் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் சுவர்களுக்குப் பின்னால் நிலவும் சாதியபாகுபாடும்,மாணவர்களின் தொடர் தற்கொலைகளும் ஜனநாயக மனசாட்சியை உலுக்கி வருகின்றன. அறிவுப் பூங்காக்களாகச் மலர்வதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கனவுகளைப் பலிவாங்கும் இடுகாடுகளாக மாறுவது வெட்கக்கேடானது.

சமீபத்தில் ஐஐடி மும்பையில் மற்றொரு மாணவர் அவரது அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, கல்வி முறையில்வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர்களின்பாதுகாப்பைக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆசிரியர்களால் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குடும்பததினர் கண்ணீருடன் குற்றம் சாட்டுவது நெஞ்சைப் பிளக்கிறது.

2018-2023 காலகட்டத்தில் 23 ஐஐடி-களில் 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்; இதில்பெரும்பாலானோர் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். மேலும், இதே காலத்தில்படிப்பை கைவிட்ட 13,000-க்கும் மேற்பட்ட மாணவர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அரசியலமைப்பு வழங்கிய இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், ஆசிரியர் தேர்வில்வெளிப்படைத்தன்மையின்றி நடப்பது உயர்கல்வித் துறையின் சாதிய மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடின்றி வேறென்ன? ஆசிரியர் நியமனத்திலும் “தகுதியான நபர்கள்கிடைக்கவில்லை” என்ற போலிச்சாக்கைக் கூறி ஒடுக்கப்பட்டோர் நிராகரிக்கப்படுகின்றனர். ஐஐடி மெட்ராஸ்உதவிப் பேராசிரியர் பிரதாப்சர்வாங்கியின் ராஜினாமா, பேராசிரியர்களுக்கே இங்கு ஆதரவான சூழல் இல்லை என்பதைத்தானே உணர்த்துகிறது?

ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஐஐடி போன்ற நிறுவனங்கள், பெரும்பான்மை மக்களின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சூழலை வழங்க மறுப்பது நியாயமா? உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட சாதியினரின் கவிகூடங்களாக மாறுவது ஜனநாயக நாட்டிற்குப் பேரபாயம். இந்தகல்வி நிறுவனங்களை ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சித்தாந்தக் குழுக்களுக்கும், சாதிய மேலாதிக்க சக்திகளுக்கும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மறைமுகமாக ஆதரவளிக்கின்றனர். அதன் விளைவேஇத்தகைய பாகுபாடுகள் எவ்வித அச்சமுமின்றித் தொடர்வதற்குக் காரணமாக அமைகிறது.

சாதியின் பெயரால் திறமைசாலிகளின் கனவுகளையும் உயிர்களையும் பலிகொடுக்கும் அவலநிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.