முந்தய பக்கம்

கண்டும் காணாமல் போக...

30 May 2026, 10:51 pm
கண்டும்  காணாமல் போக...
<p><strong>கண்டும் காணாமல் போக...</strong></p><p>அடக்கடவுளே... காதறுந்த செருப்புதான் கழட்டி விட்ட இடத்திலிருந்து காணாமல் போய்விட்டது தேடித்திரிகிறது பக்தனின் மனம் திருடிக் கொண்டு போனவனை நன்கு தெரிந்திருந்தும் கூட பேசவே இல்லை கடவுள்... சற்றே சங்கடமாகத்தான் இருக்கிறது...அத்தனை பேரும் சும்மாஇருக்கும் போது உனக்கு மட்டும் ஏனிந்த அதிகப்பிரசங்கித்தனம் என்று என் சகத்தார் கடிந்து கொள்ளும் போது... சற்றே சங்கடமாகத்தான் இருக்கிறது பேருந்து பயணங்களிலும் பேயாட்டம் ஆடும் மனிதர்களாலும் நாடு நாசமாவது தெரிந்தும் நடக்கிற அநியாயங்களை கண்டும் காணாமல் போக நான் ஒன்றும் மாடல்லவே...?</p>
Share
FacebookXWhatsAppTelegram