ஐஎப்எஸ் தேர்வு முடிவு தமிழகத்தில் சென்னை மாணவி முதலிடம்
9 May 2026, 10:51 pm

ஐஎப்எஸ் தேர்வு முடிவு தமிழகத்தில் சென்னை மாணவி முதலிடம்

சென்னை, மே 9 - இந்திய வனப்பணி (ஐஎஃப்எஸ்) தேர்வின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த ரவி லட்சுமிப்பிரியா அகில இந்திய அளவில் 9 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டுக்கான 150 பதவிகளை நிரப்ப நேர்முகத் தேர்வு நடத்தியது.

நவம்பர் 2025-இல் நடந்த மெயின் தேர்வு முடிவுகளை அடுத்து, ஏப்ரல் 6 முதல் 15 வரை நேர்காணல் நடைபெற்றது.

நேர்முகத் தேர்வு முடிந்த மறுநாள் இரவு யுபிஎஸ்சி இணையதளத்தில் இறுதி முடிவு வெளியிடப்பட்டது.

அகில இந்திய அளவில் சித்தார்த் மூன்றாவது இடத்தையும், ஆஞ்சல் சர்மா ஐந்தாவது இடத்தையும், அனூப் ரெட்டி ஆறாவது இடத்தையும், சங்கல்ப் தீட்சித் எட்டாவது இடத்தையும், அஷ்வனி குமார் ராய் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர் கூறுகையில், “தேர்ச்சி பெற்ற 148 பேரில் 84 பேர் தங்கள் அகாடமி மாணவர்கள்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற 17 பேரில் 14 பேர் தங்கள் மையத்தில் படித்தவர்கள்.

முதல் 10 இடங்களில் 6 இடங்களை அகாடமி மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.