தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரப்பான் பூச்சி கணக்குகள் முடக்கம் இணைய சுதந்திர அறக்கட்டளை கடும் கண்டனம்

25 May 2026, 8:59 pm
கரப்பான் பூச்சி  கணக்குகள் முடக்கம் இணைய சுதந்திர அறக்கட்டளை  கடும் கண்டனம்

கரப்பான் பூச்சி கணக்குகள் முடக்கம் இணைய சுதந்திர அறக்கட்டளை கடும் கண்டனம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள, இணையதள கணக்குகளை மோடி அரசு முடக்கியதற்கு இணைய சுதந்திர அறக் கட்டளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கரப்பான் பூச்சி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது அரசின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு அப்பட்டமான நடவடிக்கை ஆகும். இந்திய அரசியலமைப்பின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரி மையான பேச்சு, கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதற்கான தன்னிச்சையான, பொருத்தமற்ற முயற்சி ஆகும். ஆனால் மே 22 அன்று வெளியான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் செய்தியின்படி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் டுவிட்டர் எக்ஸ் கணக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதை யும், இது இந்தியாவின் இறையாண்மை க்கு அச்சுறுத்தலாகவும் தேசிய பாதுகாப்பி ற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக உளவுப்பிரிவின் உள்ளீடுக ளின் அடிப்படையில் இந்த முடக்க உத்த ரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 69 ஏ ஆனது ‘இந்தியா வின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, பிற நாடுகளுடனான சுமுகமான உறவுகள், பொது ஒழுங்கு அல்லது அறிந்துகொள்ளக்கூடிய குற்றங் களைச் செய்யத் தூண்டுவதைத் தடுத்தல்’ ஆகியவற்றின் நலன் கருதி, எந்தவொரு அரசு நிறுவனத்திற்கோ அல்லது இடை நிலை அமைப்பிற்கோ பொதுமக்களின் தகவல் அணுகலை முடக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ வரையறுக்கப்பட்ட சில காரணங்களின் அடிப்படையில் முடக்க அனுமதிக்கிறது என்றாலும், இந்தக் காரணங்கள் தெளி வற்றதாகவும், அனுமானங்களின் அடிப்படையிலும் இருக்கக் கூடாது.

அரசியல் வர்ணனைகளும், பொது நிறுவனங்கள் மீதான விமர்சனங்களும் இந்திய அரசியலமைப்பின் கீழ் பாது காக்கப்படும் பேச்சுரிமையின் வடிவங்க ளாகும். ஒரு சமூக ஊடகக் கணக்கின் புகழ் அல்லது அந்தக் கணக்கு அரசியல் கருத்து வெளிப்பாடுகள் மூலம் இளைஞர்களைத் திரட்டியது மட்டுமே தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட முடியாது. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.

அதனால் அரசாங்க உத்தரவின் கார ணமாக மக்களின் கணக்குகள், உள்ளடக் கங்கள் முடக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஓர் இந்தியச் சமூக ஊடகப் பயனராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ இருந் தால், தயவுசெய்து எங்களை legal@internetfreedom.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.