முந்தய பக்கம்

புரிந்து கொண்டால் வாழலாம் - கோ.பால.முருகு

15 Nov 2025, 1:19 pm
புரிந்து கொண்டால் வாழலாம்  - கோ.பால.முருகு
<p><strong>புரிந்து கொண்டால் வாழலாம்!</strong></p> <p>காகம் ஒன்று பசியுடன் காற்றில் மிதந்து வந்தது பாட்டி ஒருத்தி வடைசுட பார்த்து அருகில் வந்தது. பாட்டி எனக்கு வடையினைப் பசியைப் போக்கத் தருவாயா? என்று கேட்ட காக்கைக்கு எரிக்க விறகு இல்லையே எடுத்து வந்து கொடுப்பாயா? பாட்டி சொல்லைக் கேட்டதும் &nbsp;பறந்து சென்றது காகமும் காட்டு விறகைத் தந்தது. பாட்டி வடையைச் சுட்டதுபின் வடையைத் தருவாய் பாட்டியே வயிறு பசிக்கிற தென்றது. முதலில் விற்பனை நடக்கட்டும் முடிந்த பிறகு தருகிறேன். பாட்டி சொன்ன சொல்லுக்கு பட்டென்று சொன்னது காகமும் உழைப்பின் வியர்வைக் காயுமுன் ஊதியம் கொடுப்பது முறையாகும் முன்னே கேட்டது யாசகம் முடித்தபின் கேட்பது ஊதியம். பாட்டி நன்கு உணர்ந்தனள் பட்டென்று வடையைக் கொடுத்தனள். பறந்து சென்ற காகமோ பக்கத்துக் கிளையில் அமர்ந்தது கீழே இருந்த நரியொன்று கீழ்மைப் புத்தி கொண்டது காகம் வடையைப் பறித்திட கணக்காய் சூழ்ச்சி செய்தது காகம் நீயோ பாட்டினை கரைந்து பாடு கேட்கிறேன். &nbsp;உழைப்பை உறிஞ்சும் நரியதன் உண்மை நிலையை அறிந்தது வடையைக் காலின் இடுக்கிலே வழுக்காமல் வைத்துக் கொண்டது. காக்கா என்று கரைந்தது கயமை நரியோ ஏமாந்தது. சிறகை விரித்துக் கரைந்தது சிதறி இருந்த காகங்கள் விரைவில் வந்து கூடின. வடையைப் பங்கு போட்டன வயிறு நிரம்ப உண்டன! உழைப்பால் வந்த பொருளதை உழைக்கா நரியின் சூழ்ச்சியில் இழக்கா வண்ணம் காத்தபின் இருந்து பகிர்ந்த காகமே உழைப்புச் சுரண்டலை வென்றது! உழைப்பைச் சுரண்டும் முதலாளி பிழைப்பே நரியின் செயலாகும். புரிந்து கொண்டால் வாழலாம் புரியா விட்டால் வீழலாம்!</p>
Share
FacebookXWhatsAppTelegram