சென்னை விரைவு செய்திகள்
24 Mar 2026, 3:23 pm

2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து கைக்குழந்தை கவலைக்கிடம் சென்னை, மார்ச் 24- சென்னை கோயம்பேட்டில் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயமடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் சாமந்தி தெருவைச் சேர்ந்தவர் க.தென்னரசு (36). இவருக்கு திருமணமாகி தனா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும், தணிகைவேல் என்ற 11 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். தென்னரசு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2ஆவது தளத்தில் வசித்து வருகிறார். தென்னரசு, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். தென்னரசு மனைவி தனது குழந்தை 2ஆவது மாடியின் பால்கனியில் உள்ள கைப்பிடி சுவரில் வைத்து உணவு கொடுத்துள்ளார். சாப்பாடு கொடுத்த பின்னர், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு கை கழுவச் சென்றார். அந்த நேரத்தில் குழந்தை தணிகைவேல், பால்கனியில் இருந்து கீழே விழுந்தது. இதில் தலையில் காயமடைந்த குழந்தை தணிகைவேலை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிகாரி கைது சென்னை, மார்ச் 24- மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இணை இயக்குநர் பி.யு. கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2025 ஜூன் முதல் இயக்குநராகப் (பொறுப்பு) பணியாற்றி வந்த கார்த்தி கேயன், வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடத்தப் பட்ட விசாரணையில், 2020 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையிலான காலகட்டத்தில், தம்பதி தங்களின் வரு மானத்தை விட 121.7% கூடுதலாக, அதாவது சுமார் ரூ.99.86 லட்சம் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டுள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வரு கிறது.

தொழிலதிபரைத் தாக்கி கடத்திய வாலிபர் கைது சென்னை, மார்ச் 24- முகப்பேர் பகுதியைச் சேர்ந்த கார் வியாபாரி சரவணனை (54) தாக்கி கடத்திய வழக்கில், மணிகண்டன் (29) என்பவரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்து, கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்டனர். கடந்த சனிக்கிழமை சரவணன் தனது மகனுடன் உணவகத்தில் இருந்தபோது, திரு வள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் பேரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களைத் தாக்கி, சரவணனைக் காரில் கடத்திச் சென்றனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், சனிக்கிழமை இரவு கோல்டன் ஜார்ஜ் நகர் அருகே காரை மறித்து மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற கூட்டாளி களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு சென்னை, மார்ச் 24- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணைய் விலையேற்றத்தைக் குறிப்பிட்டு, தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் மற்றும் பாட்டில் குடிநீர் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தி யுள்ளனர். பெட்ரோலியப் பொருட்களிலிருந்து தயாரிக் கப்படும் பிளாஸ்டிக் மூடிகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை 60% வரை உயர்ந்துள்ளதே இந்த விலையேற் றத்திற்குக் காரணம் எனத் தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, 20 லிட்டர் கேன் குடிநீர் விலை 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு கேன் குடிநீர் தரத்தைப் பொறுத்து 35 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் விலை 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தின மும் சராசரியாக 3 கோடி லிட்டர் குடிநீர் விற்பனையாகும் சூழலில், இந்த விலையேற்றம் நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நிர்ண யிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்யப் படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் விலையில்லா குடிநீர் வழங்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்றும் நுகர்வோர் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் டிக்கெட் 8 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் பணம் கிடையாது!

சென்னை, மார்ச் 24- இந்திய ரயில்வே பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், முறைகேடு களைத் தடுக்கவும் டிக்கெட் ரத்து மற்றும் ரீஃபண்ட் நடைமுறைகளில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவ தற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் குறைந்தபட்ச ரத்து கட்டணமும், 72 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25 சதவீதமும், 24 முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீதமும் கட்டணம் பிடிக்கப்படும். குறிப்பாக, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்ன தாக டிக்கெட்டை ரத்து செய்தால் தொகை ஏதும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இனி நாட்டின் எந்தவொரு ரயில்வே கவுண்டரிலும் டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள லாம். ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்த வர்களுக்கு ரீஃபண்ட் தொகை டி.டி.ஆர் தாக்கல் செய்யாமலேயே தானாகவே வங்கி கணக்கிற்குத் திரும்பும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிட ங்களுக்கு முன்பு வரை தங்கள் பயண வகுப்பைத் தரம் உயர்த்திக் கொள்ளலாம். இடைத்தரகர்கள் தட்கல் டிக்கெட்டுகளைப் பதுக்குவதைத் தடுக்க ஆதார் அடிப்படை யிலான ஓடிபி சரிபார்ப்பு மற்றும் ‘ஆண்டி -பாட்’ மென்பொருள் முறைகள் அமல்படுத் தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 3 கோடிக்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்களாக மாற்றம்

சென்னை, மார்ச் 24- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகரின் 41 முக்கிய மெட்ரோ நிலையங் களை ‘ஒருங்கிணைந்த பன்முகப் போக்கு வரத்து மையங்களாக’ மாற்றும் பிரமாண்ட மறுசீரமைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை யைத் தயாரிப்பதற்கான டெண்டரை மெட்ரோ நிர்வாகம் தற்போது கோரியுள் ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, சைதாப் பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட 41 நிலையங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவுப் பரப்பு முழுமையாக மறுசீரமைக் கப்பட உள்ளது. பயணிகளின் இறுதிக்கட்ட இணைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதற்காக மெட்ரோ நிலைய நுழைவாயில்களுக்கு அருகிலேயே மாநகரப் பேருந்து நிறுத்தங் கள் மாற்றியமைக்கப்படும். மேலும், ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கெனப் பிரத்யே கமாகப் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் ஒதுக்கப்படும். தடையற்ற நடைபாதைகள், நிழற்குடை களுடன் கூடிய பாதைகள், ஆகாய நடை பாதை நீட்டிப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு அணுகுமுறை வசதிகள் ஆகியவையும் இந்த மேம்பாட்டுப் பணியில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ஒருங்கி ணைப்புப் பணிகள் சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதோடு, மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பத்தூர் தொகுதி அமமுக-வுக்கு ஒதுக்கீடு: அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி திருப்பத்தூர், மார்ச் 24- அதிமுக கூட்டணியில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து, அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. திருப்பத்தூர் தொகுதியை அதிமுக-வே நேரடியாகப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் டாக்டர் திருப்பதியின் அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று எதிர்ப்பு தெரி வித்தனர். அப்போது, ராஜா என்ற தொண்டர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்; அருகிலிருந்தவர்கள் அவரைத் தடுத்துக் காப்பாற்றினர்.

லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரிகள் 3 பேர் கைது விழுப்புரம், மார்ச் 24- விக்கிரவாண்டி அருகே மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரை, அதிகாரிகள் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி இளநாயக் கன்பட்டியைச் சேர்ந்த அதிர்ஷ்டபிரபு (28) என்பவர் லாரி ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி ஆந்திராவி லிருந்து பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு மாடுகளை ஏற்றிச் சென்றார். அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் விக்கிர வாண்டி அருகே வி.சாலையில் சென்றபோது, பின்னால் ஒரு வாகனத்தில் வந்த 3 பேர் லாரியை வழிமறித்தனர். தாங்கள் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் என்றும், மாடுகளை ஏற்றிச் செல்வதால் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் புகார் அளித்தார். விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் சத்தியசீலன் நடத்திய விசாரணையில், அவர்கள் அதிகாரிகள் இல்லை என்பது உறுதியானது. கைதானவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கசவ நல்லாத்தூரைச் சேர்ந்த ரகுராம் ஷர்மா (43), கடம்பத்தூர் ராஜ சேகர் (45) மற்றும் கார்த்திக் (40) எனத் தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய சொகுசு வாகனத்தையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

2. ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே ரூ.60 லட்சம் பறிமுதல் கிருஷ்ணகிரி, மார்ச் 24- ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்திச் சோதனை செய்தபோது, ஓசூரில் வசிக்கும் கர்நாடக மாநிலம் மாலூரைச் சேர்ந்த முகுந்தா ஆச்சாரி (63) என்பவரி டம் உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் இருந்தது கண்ட றியப்பட்டது. பெங்களூருக்கு நகை வாங்கச் சென்று, வாங்க முடியா மல் பணத்தைத் திரும்பக் கொண்டு வந்ததாக அவர் தெரி வித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆக்ரிதி சேத்தியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதேபோல், ஓசூர் சோதனைச்சாவடி அருகே உரிய ஆவணங்களின்றி ஓசூர் முனீஸ்வர் நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி (62) தனது மகளின் திருமணத்திற்காகக் கொண்டு சென்ற ரூ.13.95 லட்சத்தை நிலையான கண் காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் கடலூர், மார்ச் 24- 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையுடன் இணைந்து செயல்பட, முன்னாள் படை வீரர்கள் சிறப்புச் சமூகக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் தங்களது முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன், கடலூர் மஞ்சக்குப்பம் கிளைச் சிறை சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவல கத்தில் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04142 220732 என்ற அலுவலகத் தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பீம் செயலியின் வணிகத் தூதராக எம்.எஸ். தோனி நியமனம்! வேலூர், மார்ச் 24- இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலி யான பீம் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை தனது புதிய வணிகத் தூதராக அறிவித்துள்ளது. நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மைக்கு அடையாளமாகத் திகழும் தோனியின் வருகை, பீம் செயலியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும் என்று இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழக தலைமை அதிகாரி லலிதா நடராஜ் கூறியுள்ளார். “ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பீம் செயலியை முதன்மை விருப்பமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்,” என்றார். தோனி பேசுகையில், “டிஜிட்டல் பரிவர்த்த னைகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பீம் செயலியுடன் இணைவதில் மகிழ்ச்சி,” எனத் தெரிவித்தார். என்.பி.சி.ஐ உள்கட்டமைப் பில் உருவான பீம், இதன் மூலம் பயனர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கிருஷ்ணகிரி, மார்ச் 24- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நடைபெற இருப்பதை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட விழிப்புணர்வுப் பதாகையில், மாவட்டத்தேர்தல் அலுவலர் ச.தினேஷ்குமார் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி சென்னை, மார்ச் 24- சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் , வரும் 2026-2027 கல்வியாண்டு முதல் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி பட்ட மேற்படிப்பைத் தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுக்கு 18 இடங்களு டன் தொடங்கப்படவுள்ள இந்தப் படிப்பிற்கு, சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் இணைவு மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சிலின் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெறுவதற்கு உட்பட்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.