குறு மற்றும் சுய தொழில் முனைவோர் நல வாரியத்தை அரசு உருவாக்க வேண்டும் இந்திய தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை
13 May 2026, 2:43 am

குறு மற்றும் சுய தொழில் முனைவோர் நல வாரியத்தை அரசு உருவாக்க வேண்டும் இந்திய தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 12- குறு மற்றும் சுய தொழில் முனை வோர் நல வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய தொழில் முனைவோர் சங்கம் புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கூறுகை யில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநில பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன. வேலைவாய்ப்பு உரு வாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, உள்ளூர் வளங்களின் பயன் ஆகிய வற்றில் இத்துறையின் பங்கு மறுக்க முடியாதது.

புதிய அரசு பதவி யேற்கும் இந்த நேரத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறையின் நிலையை வலுப்படுத்தும் துணிச்சலான மற்றும் நடைமுறை சார்ந்த கொள்கைகள் அவசியமாகின்றன.

முதலில், சிறு மற்றும் பகுதி நேர தொழில் முனைவோர் - குறு மற்றும் சுய தொழில் முனைவோர் நல வாரியம் - என்ற பெயரில் தனி துறை ஒன்றை தொடங்குவது காலத்திற்கேற்ற முன்னோடியான முடிவாக இருக்கும்.

இன்று பல இளை ஞர்கள் கிக் பொருளாதாரத்தில் (gig economy) ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களை முறையான தொழில் முனை வோர்களாக மாற்றும் நோக்கில், பதிவு, நிதி, பயிற்சி, மற்றும் சந்தை இணைப்பு போன்ற அனைத்து ஆதரவுகளையும் ஒருங்கிணைக்கும் தனித்துறை அவசியம்.

மாநிலம் முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களின் வளர்ச்சியை அள விடக்கூடிய இலக்குடன் முன்னெடுக்க வேண்டும்.

தற்போதைய சுமார் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கங்களை, அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி (10 மில்லி யன்) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இதற்கு மாவட்ட வாரியான செயல் திட்டங்கள், ஊக்கத் திட்டங்கள், மற்றும் கண்காணிப்பு முறை அவசியம்.

செயல்பாட்டு செலவைக் குறைக்கும் திட்டங்கள் மிக அவசி யம்.

பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற திட்டங்களை போல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.

மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், வட்டி சலுகை, மற்றும் உற்பத்தி அடிப்படை யில் ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு தொழில் அனுபவம் அளிக்கும் நோக்கில், 10 லட்சம் மாணவர்கள் கட்டாயமாக 3 மாதங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.

இதற்கு மாதம் ரூ.6000 ஊதியம் வழங்கி, கல்வி மற்றும் தொழில் உலகத்தை இணைக்கும் பாலமாக இது அமையும். ஜிஎஸ்டி வரம்பு உயர்வு மிக முக்கிய கோரிக்கையாகும்.

சிறு தொழில்களுக்கு சுமையாக உள்ள வரி நடைமுறைகளை குறைக்க, சிறு நிறுவனங்களுக்கு வருடாந்திர வரு வாய் ரூ.1 கோடி வரை ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். இது பல சிறு தொழில்களை முறையான அமைப்புக்குள் கொண்டு வரும்.

மேலும், “சிறு நிறுவனக்களுக்கான வங்கி” ஒன்றை உருவாக்குவது காலத்திற்கேற்ற தேவையாகும்.

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகம் லிமிடெட் போல், ஆனால் சிறு தொழில்களுக்கு மட்டும் கவனம் செலுத்தும் இந்த வங்கி, நவீனமய மாக்கல், ஏற்றுமதி, மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு குறைந்த வட்டி நிதி வழங்க வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்போது, அவர்கள் உள்ளூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் மேற்கொண்டால், அவர்களுக்கு “வரி நன்மைகள்” வழங்கப்பட வேண்டும்.

இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கும்.

அதேபோல், மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க “மூலப்பொருட்களுக்கான நியாய விலைக் கடைகள்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

இது குறிப்பாக சிறு குறு நிறுவனங்களின் உற்பத்தி செலவை குறைத்து, போட்டித்திறனை உயர்த்தும்.

மேலும், அனுமதிகளை எளிமைப்படுத்தல், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் தொழிலாளர் திறன் வளர்ச்சி ஆகிய அடிப்படை அம்சங்களில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். தொழில் பாதுகாப்பு நிதி ஏற்படுத்த வேண்டும், இதன் மூலம், திடீர் செலவு, தொழில் முடக்கம் ஏற்படும் போது, குறு தொழில் முனைவோரை கரை சேர்க்க உதவும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையை வெறும் வருவாய் ஆதாரமாக மட்டும் கருதாமல் மாநில வளர்ச்சியின் கூட்டாளியாக கருதி கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். எமர்ஜென்சி “நிவாரண நிதி” ஏற்படுத்த வேண்டும். ந

லிந்த அல்லது வீழ்ந்த நிறுவனங்களை புனரமைப்பு செய்ய வேண்டும். தெளிவான இலக்குகள், நேரடி ஆதரவு, மற்றும் தொழில் முனைவோருடன் தொடர்ந்த கலந்துரையாடல்கள் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக மேலும் உயர முடியும் என்று அவர் தெரிவித்தார்.