தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர், குப்பை பிரச்சனைக்கு தீர்வு கோரி இடுவாய் ஊராட்சியில் காத்திருப்புப் போராட்டம்

17 Jul 2026, 11:29 pm
குடிநீர், குப்பை பிரச்சனைக்கு தீர்வு கோரி இடுவாய் ஊராட்சியில் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>குடிநீர், குப்பை பிரச்சனைக்கு தீர்வு கோரி இடுவாய் ஊராட்சியில் காத்திருப்புப் போராட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 17 - இடுவாய் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றக் கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இடுவாய் ஊராட்சி மன்ற அலு வலகத்திற்கு ஊர்வலமாக நடந்து வந்து, இடுவாய் ஊராட்சி மன்ற அலு வலக வளாகம் முன்பு வெள்ளி யன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி கண்டன முழக்கங் களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீரா ணம்பாளையம் கிளை செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இடு வாய் ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் கே.கணேசன், இடுவாய் ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் கள் பா.ஈஸ்வரி, ரா.ஈஸ்வரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கே.கருப்பு சாமி, கே.சுந்தரம், ஏ.கே.ராமமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தெற்கு ஒன்றிய செயலாளர் க. சிந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ரா. தினேஷ், ஜனநாயக மாதர் சங்க நிர் வாகி ப.இந்திராணி மற்றும் இடுவாய் ஊராட்சி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து திருப் பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோகிலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ குமார், இடுவாய் ஊராட்சி செயலா ளர் (பொறுப்பு) நாகராஜ் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். ஒரு வார காலத்திற்குள் குப்பையை முழுமையாக அகற்றுவ தாகவும், குடிநீர் பிரச்சனை தீர பழுத டைந்த ஆழ் குழாய்களை சீரமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய உடன டியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.