மதவெறி பாஜக - அதிமுகவை வீழ்த்தும் சித்தாந்தப் போர் சட்டப்பேரவை தேர்தல்!
9 Apr 2026, 5:30 am

மதவெறி பாஜக - அதிமுகவை வீழ்த்தும் சித்தாந்தப் போர் சட்டப்பேரவை தேர்தல்!

திருவள்ளூர், ஏப். 8- நாட்டையே நாசமாக்கும் மதவெறி கூட்டத்திற்கும், தேசத்தை நேசிக்கும் முற்போக்கு கூட்டணிக்கும் இடையே நடக்கும் இந்த சித்தாந்தப் போராட்டத்தில் பாஜக-யுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வீழ்த்தி, முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர் அறிமுகக் கூட்டம் திருவள்ளூர் பொன்னேரியில் நடைபெற்றது. திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.தேவேந்திரன், விசிக மாவட்ட செயலாளர் நிலவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வேட்பாளரின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றுவது குறித்து உரையாற்றினர்.