தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐடிபிஐ வங்கி விற்பனையை கண்டித்து ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்டிச.3 வேலை நிறுத்தம்

22 minutes before
ஐடிபிஐ வங்கி விற்பனையை கண்டித்து ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்டிச.3 வேலை நிறுத்தம்

ஐடிபிஐ வங்கி விற்பனையை கண்டித்து ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்டிச.3 வேலை நிறுத்தம்

சென்னை, நவ.26-ஐடிபிஐ வங்கி பங்குகளை கனடா நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளதை கண்டித்து புதனன்று (நவ.25) ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை கனடா நாட்டு நிதி நிறு வனத்திற்கு விற்க ஒன்றிய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐடிபிஐ வங்கி வருடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகிறது.

இந்த வங்கியை 52ஆயிரத்து 888 கோடி ரூபாய்க்கு விற்பது நாட்டின் வளத்தை அந்நிய நாட்டுக்கு தாரை வார்ப்பதாகும். 19 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.

எனவே, பங்கு விற்பனையை கைவிடக் கோரி டிச. 3 அன்று வேலைநிறுத்தம் செய்ய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி), அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (ஏஐபிஇஏ), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (ஏஐபிஓஏ) அறைகூவல் விடுத்துள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தில் வங்கித் துறையில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் என 3 லட்சம் பேர் பங்கேற்ற உள்ளனர். இதனையொட்டி நவ.25 வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஐடிபிஐ நந்தனம் கிளை அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐபிஇஏ நிர்வாகி நவீன் தலைமையில் நடைபெற்றது. சி.பி. கிருஷ்ணன் (பெபி), டி.சேகர் (ஏஐபிஇஏ), அருண் யாதவ் (ஐடிபிஐ அதிகாரிகள் சங்கம்), பே. விஜய் ஆனந்த் (ஐடிபிஐ ஊழியர் சங்கம்) ஆகியோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.