இந்தியாவில் ஆண்களிடையே அதிகரிக்கும் வாய் புற்றுநோய் - ICMR அதிர்ச்சி தகவல்!
29 Apr 2026, 11:42 am

இந்தியாவில் ஆண்களிடையே வாய்ப்புற்றுநோய் அதிகரித்து வருவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ICMR-ன் தேசிய தொற்றாத நோய்கள் தொற்றியல் நிறுவனம் (ICMR-NINE) மேற்கொண்ட இந்த ஆய்வு, 2022ஆம் ஆண்டின் Global Cancer Observatory (GLOBOCAN) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 11 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2024ஆம் ஆண்டு 15.6 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் மற்றும் 8,74,404 மரணங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2045ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 24.6 லட்சம் புதிய நோயாளிகள் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இதில், 2024ஆம் ஆண்டில் ஆண்களில் மட்டும் 1,13,000க்கும் மேற்பட்ட புதிய வாய்ப்புற்றுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

ICMR-NINE இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் மாதுர் கூறுகையில், இந்தியாவில் வாய்ப்புற்றுநோய் இன்னும் தீவிரமான மற்றும் நீடித்த பொதுசுகாதார பிரச்சினையாகவே உள்ளது, குறிப்பாக ஆண்களிடையே அதிகமாக உள்ளது என்றார்.

“இதற்கான முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு. குறிப்பாக குட்கா, பான், கைனி போன்ற புகையிலைப் பொருட்கள், மதுபானம் மற்றும் பாக்கு மெல்வது ஆகியவை முக்கிய காரணிகள். இவ்வழக்கங்கள் இளமையிலேயே தொடங்கி, சமூக பழக்கமாக ஆழமாக பதிந்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வாய்ப்புற்றுநோய் பெரும்பாலும் தாமதமான கட்டங்களில் தான் கண்டறியப்படுவதாக ஆய்வு கூறுகிறது. இதனால் அதிக செலவான மற்றும் சிக்கலான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆகவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.