ஐசிஎப் தொழிற்சாலையில் காலியாக உள்ள 2
22 May 2026, 1:24 am
<p>ஐசிஎப் தொழிற்சாலையில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (மே 21) ஐசிஎப் வளாகத்தில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் டிஆர்இயு துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், யூனியனின் பொதுச்செயலாளர் கே.டி.ஜோசி, செயல் தலைவர் என்.வேலாயுதம், இணைச் செயலாளர் யு.கமலகாந்த் ஐசிஎப் யுனைடெட் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் என்.வி.கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் பேசினர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (மே 21) ஐசிஎப் வளாகத்தில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யூனியன் தலைவர் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் டிஆர்இயு துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், யூனியனின் பொதுச்செயலாளர் கே.டி.ஜோசி, செயல் தலைவர் என்.வேலாயுதம், இணைச் செயலாளர் யு.கமலகாந்த் ஐசிஎப் யுனைடெட் கான்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் என்.வி.கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
