தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராடி வென்ற இயக்கம் துணிச்சலுடன் தொழிலாளர்களுடன் சந்திப்பு ஐசிஎப்-ஐ பாதுகாக்க யுனைடெட் ஒர்க்கர்ஸ் போராடி வென்ற இயக்கம் துணிச்சலுடன் தொழிலாளர்களுடன் சந்திப்பு ஐசிஎப்-ஐ பாதுகாக்க யுனைடெட் ஒர்க்கர்ஸ்

yesterday
போராடி வென்ற இயக்கம் துணிச்சலுடன் தொழிலாளர்களுடன்  சந்திப்பு ஐசிஎப்-ஐ பாதுகாக்க யுனைடெட் ஒர்க்கர்ஸ்  போராடி வென்ற இயக்கம் துணிச்சலுடன் தொழிலாளர்களுடன்  சந்திப்பு ஐசிஎப்-ஐ பாதுகாக்க யுனைடெட் ஒர்க்கர்ஸ்

போராடி வென்ற இயக்கம் துணிச்சலுடன் தொழிலாளர்களுடன் சந்திப்பு ஐசிஎப்-ஐ பாதுகாக்க யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் வெற்றி பெற வேண்டும் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை, நவ.12-பொதுத்துறை நிறுவனமான சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையை (ஐசிஎப்) பாதுகாக்க,சங்க அங்கீகாரத் தேர்தலில் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் வெற்றிபெற வேண்டும் எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐசிஎப் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர்10 ஆம்தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் மற்றும் மறைந்தமூத்த தொழிற்சங்கத் தலைவர்தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவின் 3-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமையன்று (நவ.12) நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுச்

செயலாளர் கே.டி.ஜோஷி வரவேற்புரையாற்றினார். சிஐடியுமாநில துணைப் பொதுச்செயலாளர் திருச்செல்வன் சங்கக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தோழர் பாசுதேவ்ஆச்சார்யாவின் உருவப்படத்திற்குத் தலைவர்களும் தொழிலாளர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐசிஎப்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் பேசுகையில், “சென்னைமாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக 515 ஏக்கர் பரப்பளவில் ஐசிஎப் திகழ்கிறது. 1955ஆம் ஆண்டு அன்றையபிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்ட இப்பொதுத்துறை நிறுவனம், இந்திய ரயில்வேயில் பல புரட்சிகளைச் செய்துள்ளது. மரத்தால் அமைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி மேற்கூரைகளை ஸ்டீலுக்கு மாற்றியது முதல், கொல்கத்தா மெட்ரோ ரயில் பெட்டிகள்,டபுள் டெக்கர் பெட்டிகள் மற்றும் இன்றைய அதிநவீன வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வரை உற்பத்தி செய்து சாதனைபடைத்து வருகிறது.போராடி வென்ற இயக்கம்20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பெட்டி உற்பத்தி ஆர்டர்கள் குறைக்கப்பட்டபோது, குறைந்தபட்சம் 1,200 பெட்டிகளுக்கு ஆர்டர் வழங்கக் கோரிப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி வென்ற இயக்கம் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன். அதேபோல், வந்தே பாரத் ரயில் பெட்டித் தொழில்நுட்பத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க ஒன்றிய அரசு முயன்றபோதும், 2019-இல் ஐசிஎப் நிறுவனத்தைக்கார்ப்பரேஷனாக மாற்ற முயன்றபோதும் அதற்கு எதிராக முதலில்களமிறங்கிப் போராடியதும் நமது சங்கம்தான். ஐசிஎப் பொதுத்துறையாக நீடிக்கவும், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் என்.எப்.ஐ.ஆர் மற்றும் ஏ.ஐ.எப்.ஆர் சங்கங்களைத் தோற்கடித்து யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்றார்.தொழிலாளர்களுக்காககுரல் கொடுத்த பாசுதேவ் ஆச்சார்யாதொடர்ந்து பேசிய சிஐடியுமாநில துணைப் பொதுச்செயலாளர் திருச்செல்வன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டதோழர் பாசுதேவ் ஆச்சார்யா, நாடாளுமன்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்தவர். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் கொத்தடிமைமுறைக்கு எதிராகவும், ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர். குறிப்பாக, ஐசிஎப் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 1,300-க்கும் மேற்பட்ட ‘ஆக்ட் அப்ரண்டீஸ்’ பணியாளர்களுக்கு நிர்வாகம் வேலை தர மறுத்தபோது, போராடி அவர்களுக்குப் பணி நியமனம் பெற்றுத்தந்தவர்,” என நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் டிஆர்இயூ பொதுச்செயலாளர் பேபி ஷகிலா, அகில இந்தியத் துறைமுகத் தொழிலாளர்கள்சம்மேளனப் பொதுச்செயலாளர் தி.நரேந்திரன், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் சி.திருவேட்டை,சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.உற்சாக ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல்நிகழ்ச்சியின் நிறைவாக,தொழிற்சங்க அலுவலகத்திலிருந்து பேண்டு வாத்தியம் முழங்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உற்சாக முழக்கங்களுடன் கம்பர் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடம் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு, கே.டி.ஜோஷி, ந.வேலாயுதம், எம்.பாஸ்கரன்ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.