போனஸ் தொகையை அதிகரிக்க வேண்டும் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தல்
55 minutes before

போனஸ் தொகையை அதிகரிக்க வேண்டும் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தல்

ரயில்வே ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 28 ஆயிரத்து 440 ரூயாயாக கணக்கிட்டு போனஸ் வழங்க கோரி புதனன்று (அக். 7) ஐசிஎப் வளாகத்தில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜெ.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கே.டி.ஜோஷி, பொருளாளர் ஜி.நடராஜன், துணைத் தலைவர்கள் பி.குமார், வெ.குருமூர்த்தி, யு.கமல்காந்த், ரயில்வே கான்ட்ராக்ட் லேபர் யூனியன் மாநில பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்டோர் பேசினர்.

சென்னை, அக்.9-ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு வரும் உற்பத்தி சார்ந்த போனஸ் தொகையை 78 நாட்களுக்கு மேல் அதி கரிக்க வேண்டும் என்றும், காலாவதியான ரூ.7,000 மாத ஊதிய வரம்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.டி. ஜோஷி வெளி யிட்டுள்ள அறிக்கையில், ரயில்வேயில் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டே ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய ரயில்வேயில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள அதேவேளையில், ஊழி யர்களின் பணிச்சுமையும் உற்பத்தித் திறனும் கணிசமாக உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து 2010-11 இல் இருந்த சுமார் 921.73 மில்லியன் டன்னிலிருந்து 2024-25 இல் 1,610 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது டன், சரக்கு வருவாயும் ரூ.62,844 கோடி

யிலிருந்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், போனஸ் தொகை கணக்கிடுவதற்கான ரூ.7,000 மாத வரம்பு 2014-15 முதல் மாற்றப்படாமல் உள்ள தாகவும், 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப் பட்ட நிலையில் தற்போதைய சூழலில் ரூ.7,000-ஐ அடிப்படையாக வைத்து போனஸ் தொகையை கணக்கிடுவது நியாயமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை உடனடியாகத் தலையிட்டு ஊக்கத்தொகையை 78 நாட்க ளுக்கு மேல் உயர்த்தி வழங்கவும், தற்போதைய ஊதிய கட்டமைப்பிற்கு ஏற்ப கணக்கீட்டு வரம்பை திருத்தவும் அல்லது நீக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.