தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐசிஎப் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1 hour before
ஐசிஎப் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து ஐசிஎப்  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஐசிஎப் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 17 - ஐசிஎப்பை தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து கண்டித்து ஜூலை 16, 17 தேதிகளில் ஐசிஎப் யுனை டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு ரயில்வே வாரிய உத்தரவு படி நான்கு ஆயிரம் எம்இஎம்யு ஏ/சி இல்லா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி வடிவமைப்பு, உற்பத்தி, இயக்கம், பராமரிப்பு ஆகிய அனைத்தும் ஐசிஎப் மூலம் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் காசிபேட் நகரில் ரூ.710 கோடியில் உருவாக்கியுள்ள ரயில் உற்பத்தி தொழிற்சாலையில் ஐசிஎப் மூலம் டெண்டர் அறிவிப்பு செய்து பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களை ரயில் பெட்டி உற்பத்தி செய்ய அழைக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் அரசு தனியார் கார்ப்பரேட் நிறுவனம் லாபம் அடைவதற்கு “ மேக் இன் இந்தியா “ என்று வெற்று வாய்வீச்சு விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது. இந்த உற்பத்திக்கான திட்டத்தில் ரயில்யில் நிரந்தர வேலை வாய்ப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூக நீதி வேலை வாய்ப்புக்கு வழியில்லாமல் அனைத்தும் கான்ட்ராக்ட் வேலையாகத்தான் இருக்கும். வந்தே பாரத், மெட்ரோ ஆகிய நவீன ரயில் பெட்டி உற்பத்தியில் சாதனை புரிந்த ஐசிஎப்-ஐ புறக்கணிக்க கூடாது. ஐசிஎப்-ல் உற்பத்தியை மேலும் நவீனப் படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. யூனியன் தலைவர் ஜே.பிரான்சிஸ் மெகோல்டு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மத்திய சென்னை மாவட்ட துணைத் தலை வர் பா.ராஜாராமன், யூனியன் பொதுச்செயலாளர் கே.டி.ஜோஷி, பொருளாளர் ஜி.நடராஜன், செயல் தலைவர் ந.வேலாயுதம், இணை பொதுச் செயலாளர்கள் ஜே.கதிரவன், எம்.பாஸ்கரன், துணை தலைவர் கமல்காந்த்,ஷெல் டிவிஷன் தலைவர் பி.குமார், செயலாளர் முபாரக் அலி, பர்னிஷிங் தலைவர் ராஜேந்திர பாபு, செயலாளர் ரவி உள்ளிட்ட உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.