போனஸ் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐசிஎப் ஒப்பந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தல்
3 Jun 2026, 11:25 pm
<p><strong>போனஸ் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐசிஎப் ஒப்பந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை, ஜூன் 3 – 2025ஆம்ஆண்டிற்கான போனஸ் வழங் காத நிறுவனங்கள் மீது ஐசிஎப் நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐசிஎப் ஒப்பந்த தொழிலாளர்கள் யூனியன் வலி யுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சி.திருவேட்டை, பொதுச்செயலாளர் என்.வி. கிருஷ்ணா ராவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற் சாலையில் (ஐசிஎப்) பணியாற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு மாத ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுகிறது. போனஸ் வழங்கப்படு வதில்லை. இதனை கண்டித்தும், ரயில்வே பணி யிடங்களை சரண்டர் செய்யக்கூடாது, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியு றுத்தி மே 21 அன்று ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் - சிஐடியு மற்றும் ஐசிஎப் ஒப்பந்த தொழிலாளர்கள் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மே 22 முதல் நியூ டெக் நிறுவன ஒப்பந்த தூய்மைப்பணி பெண் தொழிலாளர்கள் 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த தொழிலாளர்கள் யூனி யன் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மே 27 அன்று பெண் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் 2025ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகை 10 ஆயிரம் ரூபாய் செலுத்த ப்பட்டது. அதேசமயம், போனஸ் வழங்காமல் உள்ள கிங் குரூப், பர்வீன் போன்ற பிற ஒப்பந்த நிறுவனங்கள் மீதும் ஐசிஎப் நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும். 2025-ஆம் ஆண்டுக் கான போனஸை உடனடியாக பெற்றுத்தர வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.</p>
