முந்தய பக்கம்

தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎப் இலக்கு

10 Nov 2025, 5:08 pm
தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎப் இலக்கு
<p><strong>தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎப் இலக்கு</strong></p> <p>சென்னை, நவ. 10- தெற்கு ரயில்வேக்கு 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பதில் பெரம்பூர் ஐசிஎப் தொழிற் சாலை முக்கியமானதாக இருக்கிறது. இங்கு காலத்திற்கு ஏற்றார்போல், வந்தே பாரத், &lsquo;ஏசி&rsquo; மின்சார ரயில்கள், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், லிங் ஹாப்மென் புஷ் &nbsp;என்ற நவீன எல்எச்பி பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த நிதி யாண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்எச்பி பெட்டிகளை தயாரித்து ரயில் வேக்கு வழங்க உள்ளது. இதில் தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. இதுவரை 290 பெட்டிகள் தயாரித்து வழங்க ப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ சனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், ராமேஸ்வரம், கொல்லம், திருச்செந்தூர் உள்ளிட்ட விரைவு ரயில் களில் இருக்கும் பழைய பெட்டிகளை நீக்கி விட்டு, எல்எச்பி பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram