தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐஸ்லாந்தை அமெரிக்கக் கொடியின் கீழ் காட்டிய டிரம்பின் வரைபடத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம்

8 Sept 2026, 8:12 pm
ஐஸ்லாந்தை அமெரிக்கக் கொடியின் கீழ் காட்டிய டிரம்பின் வரைபடத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம்

ஹெல்சிங்கி: ஐஸ்லாந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல நாடுகள் அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டிருப்பது போன்ற வரைபடத்தை சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டதற்கு, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டாடோட்டிர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்கெர்தூர் கேட்ரின் குன்னார்ஸ்டோட்டிர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அரசு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஃப்ரோஸ்டாடோட்டிர், அந்தப் படம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்து “அபத்தமானது” என்றும், இது ஐஸ்லாந்து, கனடா மற்றும் கிரீன்லாந்து மக்களை அவமதிக்கும் செயல் என்றும் கூறினார்.

“நாடுகளின் இறையாண்மையை கேலி செய்வதில் வேடிக்கையானதோ, இயல்பானதோ எதுவுமில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் குன்னார்ஸ்டோட்டிர் கூறுகையில், டிரம்பின் பதிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அமெரிக்காவிடம் ஐஸ்லாந்து தெளிவாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

ஐஸ்லாந்து ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு என்றும், தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமை அதற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஐஸ்லாந்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் வேறு எந்த நாடும் முடிவெடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இது ஒரு நகைச்சுவை என்று கூறப்பட்டால், அது மோசமான நகைச்சுவை,” என்று குன்னார்ஸ்டோட்டிர் கூறினார்.

டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-ல் இந்தப் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான அமெரிக்கத் தூதர் பில்லி லாங்கை குன்னார்ஸ்டோட்டிர் திங்கள்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். ஐஸ்லாந்தின் நிலைப்பாடு தூதரிடம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

டிரம்ப் வெளியிட்ட வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால் மூடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.