தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

32 minutes before
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களில் 1,393 காலிப்பணியிடங்கள்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்களில் (KVKs) Technical Assistant (T-3), Senior Technical Assistant (T-4) பணிகளுக்கு 1,393 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் (ASRB) வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், பொறியியல், நூலக அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பொறியியல் பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் Diploma தகுதி போதுமானது.

வயது வரம்பு – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை – முதல்நிலை கணினி வழித் தேர்வு (Preliminary CBT), முதன்மை கணினி வழித் தேர்வு (Mains CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ.600. ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பதாரர்கள் ASRB இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களைப் பெற https://asrb.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 17, 2026 ஆகும்.

ரயில்வேயில் 2861 அப்ரன்டீஸ் காலிப்பணியிடங்கள்

மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் (Apprentice) பயிற்சிக்கு 2,861 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறி விக்கை எண்: RRC/CR/AA/2026.

கல்வித்தகுதி – 10-ஆம் வகுப்பு தேர்சி, ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு – நவம்பர் 3, 2026 தேதியின்படி குறைந்த பட்சம் 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் இதரப் பிரிவினருக்கு அரசு விதி முறை களின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை – ஐடிஐ -யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்ப டையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் படி தேர்ந்தெடுப்பர். தகுதியானவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் – பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பதாரர்கள் https://www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களைப் பெற https://www.rrccr.com/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 2, 2026 ஆகும்.

எக்ஸிம் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள்

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியான (EXIM Bank) வங்கியில் Management Trainee மற்றும் Manager பணிகளுக்கு 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி – Management Trainee பணிக்கு பிரிவுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் தொடர்புடைய முதுகலைப் பட்டம் அல்லது CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Manager பணிக்கு முதுகலைப் பட்டம் அல்லது CA தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Management Trainee பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படும்.

வயது வரம்பு – Management Trainee பணிக்கு 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். Manager பணிக்கு 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை – ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பதாரர்கள் EXIM Bank இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களைப் பெற https://www.eximbankindia.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க தொடங்கும் நாள் நவம்பர் 27, 2026. விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 11, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.