தொழில்நுட்ப கதிர்
2 hours before

தொழில்நுட்ப கதிர்

உலகின் மிக சிறிய ஏஐ சிப் தொழில்நுட்பம் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு (AI) கணினி செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதன்முறையாக 1 நானோமீட்டருக்கும் குறைவான (0.7 நானோமீட்டர்) சிப் தொழில்நுட்பத்தை ஐ.பி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சிப்பில் “நானோ ஸ்டேக்” (Nanostack) என்ற 3டி டிரான்சிஸ்டர் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், டிரான்சிஸ்டர்களை தட்டையாக அமைப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, மிகச் சிறிய இடத்தில் அதிக டிரான்சிஸ்டர்களை பொருத்தும் முறையை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிப்பின் செயல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 0.7 நானோமீட்டர் சிப் தொழில்நுட்பம், 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட 2 நானோமீட்டர் சிப்புடன் ஒப்பிடும்போது 50% வரை அதிக செயல்திறன் மற்றும் 70% வரை குறைந்த மின்சார நுகர்வு வழங்கும் என்றும், ஏஐ சிப்களில் முக்கியமான SRAM நினைவகத்தின் அளவை 40% வரை குறைக்கவும் உதவும் என்றும், இந்த முன்னேற்றம், எதிர்கால ஏஐ சிப்களின் வேகம் மற்றும் மின்சார சிக்கனத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேலும் உயர்த்தும் என ஐ.பி.எம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளது. இருப்பினும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் வணிக உற்பத்திக்கு கொண்டு வர ஐ.பி.எம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலகின் முதல் டிரக் அணுமின் உலை: சீனா சோதனை

செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், டிரக்கில் பொருத்தக்கூடிய 10 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அணுமின் உலையின் (Micro Nuclear Reactor) மாதிரியை சீனா சோதனை செய்து வருகிறது. இதுதான் உலகின் முதல் வாகனத்தில் பொருத்தப்பட்ட 10 மெகாவாட் அணுமின் உலை என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் Institute of Nuclear Energy Safety Technology ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த அணுமின் உலையில், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் பல 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் மூலம் நடுத்தர அளவிலான ஏஐ டேட்டா சென்டருக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியும்; இதுதவிர, தொலைதூர பகுதிகள், தீவுகள், அவசரகால மீட்பு பணிகள், கடல்சார் பயன்பாடுகள் மற்றும் விண்வெளி திட்டங்களுக்கும் இதனை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் தற்போது பொறியியல் சோதனை மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு கட்டத்தில் மட்டுமே உள்ளது.