கல்லூரிக் கல்வி ஆணையராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அதிருப்தி
30 May 2026, 9:28 pm

கல்லூரிக் கல்வி ஆணையராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அதிருப்தி

சென்னை, மே 30 - கல்லூரிக் கல்வி ஆணையராக மீண்டும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப் பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கழகத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு கல்லூரிகளில் பணியாற்றும் மூத்த கல்லூரி முதல்வர்களில் ஒருவரே கல்லூரிக் கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தனர்.

2024 ஆம் ஆண்டு நிர்வாகக் காரணத்திற்காக ஒரு வருடத்திற்கு மட்டும், கல்லூரிக் கல்வி இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரியை அரசு நியமித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி களையே கல்லூரிக் கல்வி ஆணையராக அரசு நியமித்து வருவது கண்டனத்துக்குரியது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வரை நேரில் சந்தித்து, பணியில் உள்ள மூத்த அரசு கல்லூரி முதல்வரையே கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க கோரினோம்.

அதற்கு மாறாக, மீண்டும் ஐஏஎஸ் அதிகாரியே கல்லூரிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, அரசு கல்லூரிகளில் பணியாற்றும் மூத்த முதல்வரை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.