அசாமில் தரையிறங்கும் போது வெடித்த ராணுவ விமானம்! 5 வீரர்கள் உயிரிழப்பு; துணை விமானி படுகாயம்
13 Jun 2026, 10:51 pm

அசாமில் தரையிறங்கும் போது வெடித்த ராணுவ விமானம்! 5 வீரர்கள் உயிரிழப்பு; துணை விமானி படுகாயம்

கவுகாத்தி, ஜூன் 13- இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம், அசாமில் விபத்துக்கு உள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

விமானப் படையில் வழக்கமான போக்குவரத்துப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ‘ஏஎன்-32’ (An-32) ரகத்தைச் சேர்ந்த இந்த விமா னம், ஜோர்ஹாட் பகுதியின் ரவுரியா விமானப் படைத் தளத்தின் ஓடுதளத் தில் காலை 11 மணி அளவில் தரை யிறங்கியது.

அப்போது, விமானத் தின் வேகம் குறைந்து வந்த சில நொடிகளிலேயே, விமானம் எதிர் பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்து, பயங்கர சத்தத்துடன் வெடித் தது.

இந்த விபத்தில், விமானப் படை யைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் பிர சாந்த் சிங், பிளைட் லெப்டினண்ட் ஷுபம் குமார், சார்ஜெண்ட் ஜிதேந் திர சர்மா, ‘அக்னிவீர்’ பிரிவைச் சேர்ந்த கேமராம் குமாவத், டேனிஷ் ஆலம் ஆகிய 5 வீரர்கள் உயிரி ழந்ததாக இந்திய விமானப்படை (IAF) தனது அறிக்கையில் உறு திப்படுத்தியுள்ளது.

துணை விமானி மட்டும் உடனடி யாக பாராசூட் மூலம் வெளியே குதித்ததால், பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் தற்போது ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் இந்திய விமா னப்படை தெரிவித்துள்ளது.