இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் 150 நோபலைச் சாதித்த நிறுவனம்; புறக்கணிக்கும் காவி கார்ப்பரேட் அரசு! - ஆயிஷா இரா.நடராசன்
yesterday

இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் 150 நோபலைச் சாதித்த நிறுவனம்; புறக்கணிக்கும் காவி கார்ப்பரேட் அரசு! - ஆயிஷா இரா.நடராசன்

“உண்மையிலேயே வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிற ஒரு நாடு தன் மக்களை சாதி மத ஆணாதிக்க மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டு அவர்களை அறிவியல் பயிற்சியை நோக்கித் திருப்ப வேண்டும்.”

– மேக்னாத் சாஹா

“நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை”

இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் (IACS - Indian Association for the Cultivation of Science)என்பது 1876 ஆம் ஆண்டு டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் எனும் மாமனிதரால் இந்தியர்கள் சுயமரியாதையுடன் அறிவியல் ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் தான் நடத்தியஆய்வுக்கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தியர்கள் ஆய்வு நடத்தப் பல வகையான தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆங்கிலேயர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வை மேற்கொள்ளலாம், இந்தியர்கள் அவர்களுக்கு எடுபிடிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் அன்றைய நிலைமை. சிலபெரிய ஆய்வுக்கூடங்களின் வாயில்களில் “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை” என்று காவல் பலகை வைக்கும் அளவிற்குச் சாதியமற்றும் இனவெறி திமிர்பிடித்த சூழல் நிலவியது

இந்தியாவிலிருந்து முதுகலை மருத்துவத்தை முதலில் பெற்று எம்.டி. எனும் அந்தஸ்தை அடைந்த டாக்டர்மகேந்திரலால் சர்க்கார், இந்த அவல நிலையைப் போக்குவதற்காக உருவாக்கியதுதான் ஐஏசிஎஸ்.கொல்கத்தாவில் ஒரு வீடு மற்றும் அருகில் இருந்த இடத்தில் கொட்டகை போலப் போடப்பட்டு ஆய்வுக்கூடம்உருவாக்கப்பட்டது. 1907 ஆம் ஆண்டு தலைமை கணக்காயர் எனும் பதவிக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி.ராமன், தன்னுடைய ஓய்வு நேரங்களில் இந்நிறுவனத்தில் ஆய்வு செய்ததன் மூலமே உலகப் புகழ்பெற்ற ‘ராமன் விளைவை’க் கண்டுபிடித்துநோபல் பரிசும் பெற்றது வரலாறு. மகேந்திரலால் சர்க்காரின் மகன் அமிர்தா லால் சர்க்கார் அதைவிட தீவிரமாகவெள்ளையரசுக்கு எதிராக நின்று இந்திய அறிவியலைச் சாதித்துக் காட்டியவர்.

லண்டனின் ராயல் கல்வியகத்திற்கு இணையாக மாதாந்திர அறிவியல் விவரிப்பு கூட்டங்கள், ஆய்வுசமர்ப்பித்தல் போன்ற அறிவுசார் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டது இந்த அமைப்பு.அங்கே என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதற்குத் தனியே ஒரு உளவுப் படையை வைத்திருந்ததுபிரிட்டிஷ் அரசு. எத்தனையோ தடைகற்களைத் தாண்டி நவீன இந்திய அறிவியலை கட்டமைத்துவளர்த்தெடுத்த பெருமை இந்த அமைப்பையே சேரும். அடிப்படை அறிவியலைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தேசிய ஆய்வகமாக அதை வளர்த்தெடுத்த பெருமை மகேந்திரலால் சர்க்காரைச்சேரும். சர் அசுதோஷ் முகர்ஜி, ஆச்சார்ய பிரபுல்லசந்திர ராய் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்நிறுவனம் தொய்வின்றிச் செயல்படத் தூணாக நின்று உழைத்தனர்.

நோபல் பரிசை சாதித்த அறிவியல் கழகம்!

1930 ஆம் ஆண்டு சி.வி. ராமன் நோபல் பரிசுபெற்றபோது உலகத்தின் முழுமையான கவனத்தைஈர்த்தது ஐஏசிஎஸ். இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு, இந்தியாவிலேயே கல்வி கற்ற ஒருவர் நோபல் பரிசு பெற்றது அப்போதுதான் முதலும்கடைசியும் ஆகும். எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பாக இதை இந்தியா ஏற்றுக்கொண்டது. விடுதலைக்குப் பிறகு இந்தியாவினுடைய அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலோடு இணைக்கப்பட்டு, செலவீனங்களை ஏற்கும் நிலை எட்டப்பட்டது.

ராமன் மட்டுமல்ல; கேதாரீஸ்வர் பானர்ஜி படிகவியல் எக்ஸ் கதிர் குறித்த துறையில் முதன்மை வாய்ந்து திகழ்ந்ததும், சத்யேந்திரநாத் போஸ் க்வாண்டம்இயற்பியலை முன்வைத்ததும், மேக்னாத் சாகா தன் அயனியாக்க சமன்பாட்டை முன்வைத்ததும் இந்த ஐஏசிஎஸ் அமைப்பில்தான். வெறும் இயற்பியல் மட்டுமல்ல, வேதியியல் துறையில் ஞான் சந்திரகோஷ் உருவாக்கிக் கொடுத்த அடிப்படை வேதியியல் என்பது இந்தியாவை தன்னிகரற்ற வேதியியல் மற்றும் பருப்பொருள் அறிவியல் துறைகளில்தலைநிமிர வைத்தது. அசிமா சாட்டர்ஜி போன்றவர்கள் பிற்காலத்தில் மருத்துவத் துறையில் அரும்பெரும் சாதனைகள் புரிந்தனர். அஜய்காதக் ஃபைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் நவீன கணினிஇயல் துறையின் அடிப்படையைச் சாதித்ததும் அங்குதான்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் 150வது ஆண்டு என்பது தேசிய அளவில் பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியஅரிய அறிவியல் கொண்டாட்ட வாய்ப்பாகும். ஆனால்,ஒன்றிய ஆளும் காவி அரசு இந்த வரலாற்று நிகழ்வை நாடு முழுவதும் அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் ஒருவாய்ப்பாக மாற்றத் தவறிவிட்டது.

நூற்றாண்டைக் கொண்டாடிய இந்திரா அரசு

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு என்கிறபெயரில் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியல் திணிப்பை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் தற்போதைய அரசு, அறிவியலில் அதைக் காட்டுவதில்லை. ஆனால், ஐஏசிஎஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை 1976 ஆம்ஆண்டு அப்போதைய அரசுஎப்படி அனுசரித்தது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். 1976 ஆம் ஆண்டு முழுவதற்குமான இந்தியஅறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் தொடக்க நிகழ்வு ஜூலை 29 அன்று அன்றையபிரதமர் இந்திரா காந்தியின் உரையோடு தொடங்கியது. அந்த உரை வானொலி, தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

அந்த ஆண்டு முழுவதும் நீடித்த மாபெரும் அறிவியல் நிகழ்ச்சிகள், பொது விரிவுரைகள், கண்காட்சிகள், அறிவியல் மாநாடுகள் என அனைத்து மாநிலங்களும் கொண்டாடும் விழாக்களாக விரிவாகத் திட்டமிடப்பட்டன. ஒரு முழுமையான வரலாற்றுத் தொகுதியைஅரசின் உதவியோடு ஐஏசிஎஸ் வெளியிட்டது. குறிப்பாக, கேரளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் முதலமைச்சர் தோழர் அச்சுதமேனன் அந்த ஆண்டுதான் ‘கேரள அறிவியல் திருவிழா’ எனும் பிரம்மாண்டத்தை அறிமுகம் செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. பேராசிரியர் யஷ்பால், சி.என்.ஆர். ராவ் உள்ளிட்ட பலரை அடையாளப்படுத்திய ஒரு ஆண்டாக நாம் அதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மாபெரும் அறிவியல்பாரம்பரியத்தைத்தான் இன்றைய காவி-கார்ப்பரேட் அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து வருகிறது.

அறிவியலை அவமதிக்கும் காவி கார்ப்பரேட் அரசாங்கம்

இன்று 2026 ஆம் ஆண்டில், ‘விஷன் 2047’ மற்றும் ‘ஆத்ம நிர்பர் பாரத்’ ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, தொழில்நுட்பம் மற்றும் வணிக உற்பத்தி சூழல் அமைப்புகளை உருவாக்கும் ஆய்வுகளை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அரசுஎடுத்துள்ளது. இதன் மூலம் அனைத்தும் தனியார் மயத்தை நோக்கி மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. ஐஏசிஎஸ் 150-வது ஆண்டைக்கொண்டாடுவதை விட்டுவிட்டு, நவீன நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அதன் உருமாற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

ஏற்கெனவே அடிப்படை அறிவியல் ஆய்வுகள் இந்தியாவில் கைவிடப்பட்டுவிட்டன. நம் நாட்டின் மொத்த ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டுச் செலவு (GERD) இன்றைக்கும் கூட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.64சதவிகிதம் மட்டுமே. (சீனா 2%, அமெரிக்கா 3%, இஸ்ரேல் 5% செலவிடுகின்றன). ஆனால், நம்முடைய அரசுதொடர்ந்து தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டேஇருக்கிறது. 10% அரசு கொடுத்தால் மீதி90% தனியார் துறையின் முதலீடாகப் பெற்று ஆய்வைத் தொடரலாம் என்பது இன்று எழுதப்படாத விதியாகிவிட்டது.அடிப்படை அறிவியலை வளர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐஏசிஎஸ் போன்றதொரு அமைப்பின் 150வது ஆண்டுகொண்டாட்டத்தை வீண் செலவினம் என்று அது கருதுவது வேதனை அளிப்பதாகும்.

அதானி அம்பானிக்கு விருந்தாகும் இந்திய அறிவியல்

ஒரு நாடு தனது ஆய்வகங்களை அதானி, அம்பானி என்று சந்தையின் தேவைக்கு மட்டும் ஒப்படைக்கத்தொடங்கினால், எதிர்காலத்தில் நோபல் பரிசு உட்பட அற்புதங்களை உருவாக்கும் சுதந்திரமான அறிவியல்ஆய்வுகளும் நாட்டின் அடிப்படை அறிவியல் சிந்தனைப் போக்கும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். தனியார் முதலீடு என்பது அரசின் பொறுப்புக்கு மாற்றாக எப்படி இருக்க முடியும்?ஏற்கெனவே இஸ்ரோ மாதிரியான அமைப்புகளிலிருந்து தனியார்மயத்திற்குப் பயந்து நூற்றுக்கணக்கானவிஞ்ஞானிகள் வெளியேறிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

மகேந்திரலால் சர்க்கார் உருவாக்கிய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் போன்ற நிறுவனங்கள் உருவானதுஉடனடி லாபத்திற்காக அல்ல; மனித அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான கனவோடு அவை தொடங்கப்பட்டன. ஆனால், நாட்டில் அறிவியல் என்பது பொதுச் சொத்தாக இல்லாமல் சந்தைப்பொருளாக, கார்ப்பரேட் சொத்தாக மாற்றப்படுகின்ற மிகப்பெரிய அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

அறிவியலை வீழ்த்தும் சனாதனம்

இந்திய அறிவியல் மாநாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பிள்ளையார் பால் குடித்தபோது அதன்அறிவியல் தன்மையை எடுத்துக்காட்டி மூடநம்பிக்கையை எதிர்த்த ‘விஞ்ஞான் பிரசார்’ நிறுவனம் இழுத்துமூடப்பட்டுவிட்டது. அறிவியல் ஆய்வு என்கிற பெயரில் ஐ.ஐ.டி. இயக்குநர்கள் உட்பட அனைவருமே ‘கோமிய அறிவியலை’ முன்வைப்பதும், பரத்வாஜ முனிவர்விமானத்தைக் கண்டுபிடித்தார் என்பதிலிருந்து விண்வெளிக்கு முதலில் பறந்தது அனுமன் என்பது வரை கவர்னர்களும் “அறிவுஜீவிகளும்” குழந்தைகள்மனதில் நஞ்சை விதைத்து வருவதுதொடர்கிறது. மாண்டி நகரின் ஐ.ஐ.டி. நிறுவனம் ‘மறுபிறவி’ பற்றி ஒரு தனித்துறையைத் தொடங்கும் அளவிற்கு தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வியில் சனாதனத்தைப் புகுத்திவிட்டது.

இந்திய அறிவியல் வெல்லட்டும்!

அரசு ஆதரிக்காவிடில் என்ன? இந்திய விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து தாங்களாகவே ஐஏசிஎஸ் நவீன இந்திய அறிவியல் வரலாற்று நிறுவனத்தின் 150வது ஆண்டைமக்கள் விழாவாக முன்னெடுக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசின் கடும் ஒடுக்குமுறைகளை மீறிஉலக அளவில் வெற்றி கண்டது போலவே, இந்தத் தனியார்மய கார்ப்பரேட் காவி அரசின் புறக்கணிப்புகளை மீறி ஐஏசிஎஸ்வென்று காட்ட வேண்டும். மதவெறி அரசியலுக்கு எதிராக நாம் முன்வைக்க வேண்டிய சமத்துவ அறிவியல் எழுச்சி இதிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின்கனவுகள்தொடரட்டும்; மதவெறி தூண்டும் வெறுப்பு அரசியல் அழியட்டும்; இந்திய அறிவியல் வெல்லட்டும்!