தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள், பூர்வீக பழங்குடி மக்களின் பட்டா உரிமைக்கு குரல் கொடுப்பேன்!

12 Apr 2026, 5:30 am
விவசாயிகள், பூர்வீக பழங்குடி மக்களின் பட்டா உரிமைக்கு குரல் கொடுப்பேன்!

விவசாயிகள், பூர்வீக பழங்குடி மக்களின் பட்டா உரிமைக்கு குரல் கொடுப்பேன்!

கொடைக்கானல் வாக்குசேகரிப்பின் போது என். பாண்டி உறுதி

பழனி, ஏப். 11 - பாரம்பரிய விவசாயிகள், பூர்வீக பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், பட்டா உரிமைக்காக குரல் கொடுப்பேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழனி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் என். பாண்டி உறுதியளித்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி கொடைக்கானல் சுற்று வட்டாரப்பகுதிகளில், சனிக்கிழமையன்று 2-ஆவது நாளாக வாக்கு சேகரிப்பு பயணம் மேற்கொண்டார்.

காலை பெருமாள் மலை, உப்புப்பாறை மெத்து, பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், பாலமலை, அடுக்கம் உள்ளிட்ட சிறு கிராமப் பகுதிகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பழங்குடியினர், விவசாயிகள் வாழும் பகுதிகளில் வாக்குசேகரித்த என். பாண்டி, "2006 வன உரிமைச் சட்டப்படி கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பாரம்பரிய விவசாயிகள், பூர்வீக குடிகளான பழங்குடி மக்களின் வாழ்வாதார பட்டா உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்" என உறுதியளித்தார்.

மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டி, பூர்வீக பழங்குடி மக்களை மலையிலிருந்து வெளியேற்றி விட்டு இயற்கை வளங்கள் நிறைந்த கொடைக்கானல் பகுதியை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க துடிக்கும் அதிமுக பாஜக கூட்டணியை தமிழ்நாடு முழுவதும் தோற்கடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்து, குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும்; பெருமாள் மலை பிரிவிலிருந்து உப்புப் பாறை மெத்து வழியாக பூம்பாறை மெத்து வரை முறையான சாலை வசதி, சமக்கடைப் பள்ளம் முதல் பாலமலை வரை முறையான சாலை வசதி, கொடைக்கானல் பகுதியில் உள்ள சிறு கிராமங்களில் பொதுக் கழிப்பறை வசதி, தெருவிளக்குகள், புதிய சமுதாயக்கூடம், கழிவு நீர் வடிகால், வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.