முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்! பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி
7 Apr 2026, 5:42 pm
<p><strong>முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்! பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி</strong></p>
<p>தருமபுரி, ஏப்.7- பாப்பிரெட்டிப்பட்டியை அனைத்திற்கும் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் தெரிவித்துள் ளார். தருமபுரி மாவட்டம், பாப் பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் முனைவர் பி.பழனி யப்பன், கடத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட் பட்ட கிராமங்களில் செவ்வாயன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுங்கர அள்ளி யில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், கிரா மம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அரசின் மக் கள் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி கடைக் கோடி மனிதருக்கும் சென்றடைய பாடுபடு வேன். குறிப்பாக, விவசாயப் பெருமக்களின் தேவைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயி களின் பாசனப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நான் முன்னுரிமை அளிப் பேன். தடையற்ற குடிநீர் வசதி மற்றும் தர மான சாலைக் கட்டமைப்பு ஆகிய பணிக ளுக்கு முன்னுரிமை அளித்து, பாப்பி ரெட்டிப்பட்டி தொகுதியை முன்மாதிரி தொகு தியாக மாற்றுவேன், என்றார். இதைத்தொ டர்ந்து, ரேகடஅள்ளி, நத்தமேடு, சோலை கொட்டாய், கிருஷ்ணாபுரம், பழைய தரும புரி, முக்கல்நாய்கன்பட்டி உள்ளிட்ட கிராமங் களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.</p>
