முந்தய பக்கம்

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!

8 Apr 2026, 5:30 am
முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!
<p><strong>முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!</strong></p><p>பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி. தருமபுரி, ஏப்.7: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.</p><p>தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசின் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram