கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
29 Dec 2025, 6:22 pm

‘நான் பாதுகாப்பாக அரசு பேருந்தை இயக்குவேன்’

உதகை, டிச. 29- அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்பேசி, ஹட்செட், ப்ளூடூத் ஆகியவற்றை பயன்படுத்தகூடாது. என, அறிவுரை வழங்கப்பட்டது டன். அதிகாரிகள் முன்பு உறுதி மொழி எடுத்து கொண்ட னர். கடந்த வாரத்தில் கடலூர் பகுதியில் அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, கார்கள் மீது பஸ் மோதிய விபத்தில் , 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த னர். இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு விழிப்பு ணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவுப்படி, ஊட்டி மண்டல பொது மேலாளர் ஜெய்சங்கர், துணை மேலாளர் ராம மூர்த்தி தலைமையில் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து, மொபைல் பேசியப்படி வாகனம் இயக்கக் கூடாது, மொபைலில் ஹெட் செட், ப்ளூ டூத் உள்ளிட்ட வற்றை இணைத்து, காதில் அந்த இயந்திரங்களை வைத்து பேசியபடி அல்லது பாடல்கள் கேட்ட படி வாக னம் இயக்கக் கூடாது. மேலும், பேருந்துகளை இயக்கும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டால், உடனடியாக பேருந்தை நிறுத்தி கிளை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தூக்கம் வந்தால் இயக்கக் கூடாது. உள்ளிட்ட அறிவு ரைகள் வழங்கப்பட்டது. அதே போல், கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை மேலாளர் தங்க ராஜ் தலைமையில் டிரைவர்கள் கண்டக்டர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

450 ஆண்டு கால தேருக்கு ஓய்வு நாமக்கல், டிச.29- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில் 450 ஆண்டு கால மாக அர்த்தநாரீஸ்வரர் நகர் வலம் வந்த தேருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதிய தேர் நகர் வலம் வர உள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உலகப் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்கின்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக, திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் ஆண் பாதி பெண் பாதி உருவமாக உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வைகாசி விசாக தேர் திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சுமார் 450 ஆண்டு களாக மைசூர் மகாராஜா ஒருவர் செய்து கொடுத்த தேரில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமியின் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிலையில், தேர் மிகவும் பழமையடைந்து விட்ட காரணத்தால் புதிய தேர் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பிலான புதிய தேரை அமைக்க அனுமதி அளித்திருந்தது. தற்போது புதிய தேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 25 ஆம் தேதி புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆண்டு முதல் வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் புதிய தேர் இயக்கப்படும். எனவே பழைய தேருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆனாலும் பழமை வாய்ந்த இந்த தேரை எதிர்கால சந்ததியினரும் கண்டு களிக்கும் வகையில் பழைய தேர் ஜேசிபி, கிரேன், டிராக்டர்கள் உதவியுடன் பழைய தேர் நின்றிருந்த இடத்திற்கு அரு காமையில் தனி இடம் ஒதுக்கப்பட்டு நிலை நிறுத் தப்பட்டுள்ளது.

காவல்துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்

கோவை, டிச.29- கோவையில் பாஜகவினர் பொது மக்களுக்கு இடையூறாக சாலையோரம் கொடிக்கம்பங்களை நட்டதோடு, அத னைக் கேட்ட காவல்துறையினரை ஒருமை யில் பேசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பங்கேற்கிற நிகழ்வுக்கு, சுந்தரா புரம் பகுதியில் இருந்து மலுமிச்சம்பட்டி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை யோரம் பாஜகவினர் கொடிக்கம்பங்களை நட்டு வைத்தனர். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால், நிகழ்ச்சி நடைபெறும் இடத் திற்கு அருகே மட்டும் கொடிகளை வைக்கு மாறும், நெடுஞ்சாலையில் வைக்க வேண் டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி னர். ஆனால், சட்டத்தை மதிக்காத பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகர் மற் றும் செயற்குழு உறுப்பினர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், காவ லர்களை ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசினர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டது மட்டுமன்றி, பாதுகாப்புப் பணியில் இருந்த அரசு ஊழியர்களை அவமதித்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உதவி ஆணையர் மீது புகார்

ஈரோடு, டிச. 29- ஈரோடு மாநகராட்சியில் வரி வசூல் என்ற பெயரில் உதவி ஆணையர் சர்வாதிகாரத்தன மாக செயல்படுவதாக திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் சார்பில் குறைதீர் கூட்டத் தில் அளிக்கப்பட்ட மனுவில், ஈரோட்டில் தொழில்கள் மிகவும் நலிவடைந்துள்ளது. ஈட்டக்கூடிய வாடகையை விட தற்போது வரி உயர்வு அதிகமாக உள்ளது. மாமன்ற பிரதி நிதிகள் எதிர்ப்பினை பதிவு செய்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பியுள்ளனர். இந்நிலையில், உதவி ஆணையர் (வரு வாய்) பொறுப்பில் உள்ள கார்த்திகேயன் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கடைகள், நிறுவனங்களில் அதிரடியாக நுழைந்து கத வைப் பூட்டி சீல் வைப்பதாக மிரட்டுகிறார். கந்து வசூல் காரர்களைப் போல் குரலை உயர்த்தி அசிங்கப்படுத்துகிறார். நீண்ட பாரம்பரியம் கொண்ட ஈரோட்டில் 100 விழுக் காடு வரியை உரிய காலத்தில் செலுத்தி வந்துள்ளனர். இவரைப் போல மோசமான அணுகுமுறையில் எவரும் ஈடுபட்டதில்லை. இவரது செயல் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள் ளது என அதில் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளிங் போட்டியில் பதக்கம்

உதகை, டிச.29- உதகையை சேர்ந்த அரசு ஊழியர் சைக்கி ளிங் போட்டியில் தேசிய, உலக அளவில் பங் கேற்று பதக்கங்களை வென்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, ஹில் பங்க் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத், சைக்கிளிங் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட, மாநிலம் என, பல்வேறு போட்டி யில் பங்கேற்று விளையாடியுள்ளார். கடந்த டிச., 6ம் தேதி சைக்கிளிங் பெடரேஷன் ஆப் இந்தியா வாயிலாக ஒடிசா மாநிலத்தில் நடந்த, 30வது தேசிய அளவிலான , 50 கி.மீ., சீனியர் பிரிவிற்கான சைக்கிளிங் பங்கேற்று தங்கம் வென்றார். அதே போல, நெதர்லாந்து நாட்டில் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் பதக்கம் வென்றார். ஸ்ரீநாத் கூறுகையில், மாநில அரசு வாயி லாக போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென் றேன். தேசிய மற்றும் உலக அளவில் நடந்த சைக்கிளிங் போட்டியில் வென்று அதன் வாயி லாக பெற்ற பதக்கங்களை ஆட்சியரிடம் காண் பித்து வாழ்த்து பெற்றேன். அரசின் மூன்று சத வீத இட ஒதுக்கீட்டின் வாயிலாக ஊட்டி வணிகவரித்துறையில் இளநிலை உதவியா ளராக பணியாற்றி வருகிறேன். என்றார்.