தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

2 Apr 2026, 3:50 pm
சென்னை விரைவு செய்திகள்

மின்சாரம் தாக்கி  மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி

கள்ளக்குறிச்சி, ஏப்.2- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே விஜயபுரத்தில் உள்ள முருகன் கோவில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா  புதனன்று (ஏப்ரல் 1) நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, தேர் மூங்கில்பாடி சாலையில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகம் அருகே வந்தபோது, மின் கம்பிகள் தேரின் மீது உரசும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மின்கம்பியில் உள்ள இணைப்பைத் துண்டிப்பதற்காக ஏறிய தற்காலிக ஒப்பந்த ஊழியர், மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே தீப்பிடித்து எரிந்தார். உயர்கழுத்த மின்சாரப் பாதையை துண்டிக்காமல் மின்கம்பத்தில் ஏறியதால் இந்த விபத்து நேரிட்டது. படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தற்காலிகப் பணியாளரை மின்கம்பத்தில் ஏற அனுமதித்தது மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மின் வாரிய ஊழியர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைத் தடுக்கவும், ஊழியர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கவும் மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தோள்பட்டை தமனி வழியாக இதய வால்வு மாற்று சிகிச்சை!

சென்னை, ஏப்.2- சென்னை மனப்பாக்கம்  எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனையில், 73 வயது முதியவருக்கு TAVR/TAVI எனப்படும் நவீன இதய வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாகக் காலில் உள்ள தமனி வழியாகச் செய்யப்படும் இச்சிகிச்சை, நோயாளிக்கு இருந்த ரத்தக்குழாய் சிக்கல்களால், இந்தியாவிலேயே முதல்முறையாக வலது தோள்பட்டை தமனி வழியாக மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் பாலமுருகன் தலைமையிலான நிபுணர்கள் குழு, திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், சிகிச்சை முடிந்த மூன்றாம் நாளே நலமுடன் வீடு திரும்பினார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் இத்தகைய வால்வு சுருக்க பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிரைக் காக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாடிப்படி ஏறும்போது மூச்சுத்திணறல், நெஞ்சுவலி உள்ளிட்டவை இந்த பாதிப்பின் அறிகுறியாக இருக்கும் என்றும்  அவர் கூறினார்.

அரும்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, ஏப்.2- சென்னை அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியால் கடந்த ஒரு மாதமாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.  குறுகிய இச்சாலையில் இருவழிப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால் விபத்து அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பணிகளை விரைவில் முடிக்கவும், கூடுதல் தடுப்புகள் அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

“திமுகவினருடன் தொடர்பு வைத்தால்  கையை வெட்டுவேன்”! அதிமுக வேட்பாளர் குமரகுரு சர்ச்சை பேச்சு

கள்ளக்குறிச்சி, ஏப். 2- திருக்கோவிலூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளருமான குமரகுரு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக நிர்வாகிகள் யாராவது திமுகவினருடன் தொடர்பில் இருந்தால், நானே நேரடியாக வந்து உங்கள் கையை வெட்டுவேன். யாராவது திமுகவினருடன் பேசுவதாகத் தெரிந்தால் கையை உடைத்து விடுவேன்; மற்றவர்கள் மூலம் இது என் காதுக்கு வந்தால் கையைத் துண்டாக வெட்டி விடுவேன்” என்று ஆக்ரோஷமாகப் பேசி னார். குமரகுருவின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சு தொண்டர்கள் மத்தியில் சலசலப்பையும், பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், பின்னர் மன்னிப்பு கேட்பதும் இவருக்குப் பழகிப்போன ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

கோயம்பேட்டில்  சாமந்தி பூ விலை உயர்வு '

சென்னை, ஏப்.2- சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, திருத்தணி, ஓசூர், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.  பங்குனி மாதம் தொடங்கியதில் இருந்து சுபமுகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் குறைவாக இருந்ததால் பூ விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் சாமந்தி மற்றும் ரோஜாப்பூ விலை வீழ்ச்சி அடைந்தது.மல்லி ரூ.400 வரையும்,பன்னீர் ரோஜா- ரூ.50 முதல் -ரூ.100 வரை, சாக்லேட் ரோஜா- ரூ.70 முதல் -ரூ.120வரை, கனகாம்பரம் மற்றும் முல்லை- ரூ.400, அரளி- ரூ.300, சாமந்தி- ரூ.120முதல்  ரூ.160வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை - தூத்துக்குடி விமானக் கட்டணம் ரூ.14,000-ஐத் தாண்டியது

சென்னை, ஏப்.2-  புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள்  வியாழனன்று பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னை - தூத்துக்குடி குறைந்தபட்சக் கட்டணம் ரூ.6,503-ல் இருந்து ரூ.14,418 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மதுரைக்கு ரூ.12,337, கோவைக்கு ரூ.6,000, திருச்சிக்கு ரூ.6,668 ஆகக் கட்டணம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணங்கள் சர்வதேச விமானக் கட்டணங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'

தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.55 கோடி பறிமுதல் '

சென்னை, ஏப். 2- சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த இரண்டு நாட்களில் நடத்திய சோதனைகளில் ரூ.1.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லைட் ஹவுஸ் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைபெற்ற இந்த பறிமுதல் சம்பவங்கள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை அன்று, லைட் ஹவுஸ் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், கேஷ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் நிறுவனத்தின் வாகனம் ஒன்று பிடிபட்டது. இந்த வாகனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ரூ.1.47 கோடி இருந்தது. வாகனமும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு மெரினா காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. திங்கட்கிழமை அன்று, பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒரு பயணியிடமிருந்து ரூ.8.39 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த பயணி எண்ணூரைச் சேர்ந்த நூர் முஹம்மது (42) என்று அடையாளம் காணப்பட்டார். அவர் பிரியாணி மொத்த ஆர்டர் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், பணத்தை கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கச் செல்வதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரு. வி. க. நகர் தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர்

கருவூலத்தில் டெபாசிட் செய்யப்பட்டது.

ஏப்ரல் 5 முதல் எழும்பூரிலிருந்து புறநகர் ரயில் சேவை இயங்கும் சென்னை, ஏப். 2- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10 மற்றும் 11-ல் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதையடுத்து, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை பழைய கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவீனமயமாக்கல் பணிகளுக்காகக் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தற்போது, 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டுப் பணிகளை முடித்துள்ளனர். ஏப்ரல் 5 முதல் சேவைகள் சீராகும் என்ற அறிவிப்பால் தினசரி பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் திமுக வேட்பாளர் காலில் விழுந்து  ஆசீர்வாதம் வாங்கிய அதிமுக வேட்பாளர்!

திருவள்ளூர், ஏப். 2- சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கலும், பிரசாரங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவற்றின் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தனர். தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் விஜயகுமார் முதலாக மனுத் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் மனுத் தாக்கல் செய்தார். மூன்றாவதாக அதிமுக வேட்பாளர் சுதாகர் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி அதிகமான எண்ணிக்கையில் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே, அதிமுக வேட்பாளர் சுதாகர் தேர்தல் அலு வலகத்திற்குள் சென்றபோது, அங்குத் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த திமுக வேட்பா ளர் டி.ஜே. கோவிந்தராஜனின் காலில் விழுந்து மரியாதை நிமித்தமாக ஆசீர்வாதம் வாங்கி னார். தேர்தல் களம் உச்சக்கட்டப் போட்டி யில் இருக்கும் வேளையில், எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய இச்சம்ப வம் சுவாரசியமாக இருந்தது.

மயிலாப்பூர், தி.நகர் தொகுதி வேட்பாளர்கள்  50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உறுதி

சென்னை, ஏப். 2 – மயிலாப்பூர், தியாகராயநகர் தொகுதி களில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று  அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்கள் மயிலை த.வேலு (மயிலாப்பூர்), ராஜா அன்பழகன் (தியாகராய நகர்) ஆகி யோருக்கான செயல்வீரர் கூட்டம் புதனன்று (மார்ச் 1) ஒய்எம்சிஏ மைதானத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மயிலாப்பூரில் 6 ஆயிரம் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. 3500 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. நவீன மீன் அங்காடி, தொல்காப்பியர் பூங்கா, 2 முதலமைச்சர் படைப்பகங்கள், 18 சத்துணவு கூடங்கள் கட்டப்பட்டுள்ளது.  தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக மயிலை த.வேலு செலவிட்டுள்ளார். தியாகராயநகரில் உயர்மட்ட நடைமேம்பாலம், 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரும்பு பாலம், முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற திமுக அரசின் ஆக்கப்பூர்வ மான பணிகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்தில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.

அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் புகையிலை ஒழிப்பு பயிலரங்கம்

சென்னை, ஏப்.2- சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் , புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஒருங்கி ணைந்த மற்றும் ஆதாரப்பூர்வ மான உத்திகள் குறித்து விவாதிக்க, ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. இதில், மருத்துவத் துறை, பொதுச் சுகாதாரத் துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பல வல்லுநர்கள் கலந்து கொண்டனர். எச்சிஎல் அறக்கட்டளை, இந்தியப் புற்றுநோய் சங்கம், பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தை, கல்பனா பாலகிருஷ்ணன் (தலைமைச் செயல் அதிகாரி) மற்றும் கிருஷ்ண ராஜ் (இணை இயக்குநர்) ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், 11 பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 4 மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றன. புகையிலையால் ஏற்படும் நோய்களின் சுமை, உலகளாவிய கட்டமைப்புகள் மற்றும் நடைமுறை ஒழிப்பு உத்திகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. ஆர். சுவாமிநாதன் (இணை இயக்குநர்) புகையிலை மற்றும் புற்றுநோய்க்கு இடையிலான தொடர்பை விளக்கினார். வேதா வி.பி.கே, எம்பவர் போன்ற உலகளாவிய நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார். வல்லுநர்கள் புகையிலையை ஒழிப்பதற்கான நடத்தை மற்றும் மருத்துவ அணுகுமுறைகள், நிக்கோடின் அடிமை மேலாண்மை, மருந்தியல் சிகிச்சை மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தலையீடுகள் போன்ற வளர்ந்து வரும் கருவிகள் குறித்து விவாதித்தனர். மாநில அளவிலான திட்டங்களை வலுப்படுத்தவும், தினசரிச் சுகாதாரச் சேவை களில் புகையிலை ஒழிப்புச் சேவைகளை ஒருங்கிணைக்க வும் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் விதி மீறல் குறித்து நேரில் புகார் அளிக்கலாம்

செங்கல்பட்டு, ஏப்.2- தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வை யாளர்களிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகச் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரிடையாகவும், அலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள், வேட்பாளர்களின் செலவினங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பணிகளைக் கண்காணிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் கீழ்க்கண்ட பார்வையாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்: சோழிங்கநல்லூர் - 7200843704; பல்லாவரம் - 7200813704; தாம்பரம் - 7200954217; செங்கல்பட்டு - 7200964217; திருப்போரூர் - 7200983704; செய்யூர் - 7200824217; மதுராந்தகம் - 7200694217: தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்துப் பொதுப் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்க விரும்புவோர், தினமும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.