தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“என்கிட்ட ‘சரக்கு’ இல்லை ; தியாகராஜன் தான் எனக்கு எல்லாம்!”

11 Apr 2026, 5:30 am
“என்கிட்ட ‘சரக்கு’ இல்லை ; தியாகராஜன் தான் எனக்கு எல்லாம்!”

“என்கிட்ட ‘சரக்கு’ இல்லை ; தியாகராஜன் தான் எனக்கு எல்லாம்!”

பொதுவாக ஒரு வேட்பாளர் தேர்தல் களத்தில் இறங்கினால், “நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன்” எனத் தன் கொள்கையைப் பேசி ஓட்டு கேட்பார். ஆனால், மதுரை மத்திய தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி-யோ, “எதிர்க்கட்சி வேட்பாளர்தான் என் பலமே” என்று கூறி மதுரை மக்களை அதிர வைத்துள்ளார். “நான் பேச வேண்டியதை எல்லாம் பழனிவேல் தியாகராஜனே பேசிக்கொள்கிறார், அவருக்கு நன்றி” என்று சுந்தர்.சி கூறியதைப் பார்த்தால், இவருக்குச் சொந்தமாகப் பேச எந்தத் திட்டமும் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மதுரை மெட்ரோ முதல் எய்ம்ஸ் வரை அனைத்திற்கும் மாநில அரசுதான் முட்டுக்கட்டை என இவர் வாசிக்கும் ‘பழைய பல்லவி’, மதுரை மக்களிடம் எடுபடாது என்பது இவருக்கே தெரிந்துவிட்டது போலிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தாமதப் படுத்தும் ஒன்றிய அரசைப் பற்றிப் பேச சுந்தர்.சி-க்குத் துணிவில்லை. மாறாக, “தியாகராஜன் மேலிருக்கிற அதிருப்திதான் எனக்குப் பலம்” என்று கூறுவதன் மூலம், தனக்கு எனச் சொல்லிக்கொள்ள எந்தத் தகுதியும் இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிகாரிகள் கையில் அதிகாரம் இருப்பதாகத் தியாகராஜன் வெளிப்படுத்திய ஆதங்கத்தைத் ‘தண்டனை’ என வர்ணிக்கும் சுந்தர்.சி, ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மதுரைக்கு ஒரு முழுமையான மருத்துவமனையைக் கூடத் தராத ‘விஸ்வகுரு’வின் மௌனத்திற்கு என்ன பெயர் வைப்பார்? சொந்தக் கொள்கையையும், ஒன்றிய அரசின் சாதனைகளையும் வைத்து ஜெயிக்க முடியாது என்று தெரிந்த பிறகு, எதிர்க்கட்சி வேட்பாளரின் ஆடியோவையும், ஆதங்கத்தையும் நம்பிச் சுந்தர்.சி காலத்தை ஓட்டுகிறார்.

அடுத்தவர்களின் அதிருப்தியை நம்பி அரசியல் செய்வதற்குப் பதில், மதுரைக்கு ஒன்றிய அரசு செய்த நன்மைகள் குறித்து ஒரு சிறு பட்டியலைத் தயார் செய்துவிட்டு அவர் மக்களிடம் வந்தால் நலமாக இருக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.