விஜய் பற்றி பேசியதற்கு வருத்தப்படவில்லை! இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>விஜய் பற்றி பேசியதற்கு வருத்தப்படவில்லை! இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டி</strong></p>
<p>சென்னை, மார்ச் 26 - தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல்செய்த விவகாரம் பேசுபொருளாகி வரும் நிலையில், நடிகர் சமுத்திரக்கனி ஒரு நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சமுத்திரக்கனி, “யாரை பழிவாங்க இதை செய்கிறார்? தன்னைச் சுற்றி ஒரு பிரச்சனை நடக்கும்போது நடிகையுடன் நிகழ்ச்சிக்கு வருகிறார். நான்கு சுவருக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது. சொந்தக் கட்சித் தொண்டர்களாலேயே இதற்கு முட்டுக்கொடுக்க முடியாது” என்று கூறியிருந்தார். இது விஜய்யைக் குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “நான் பேசுவதை வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்தே பேசினேன். பேசிவிட்டு பிறகு வருந்தவும் இல்லை. என் மனதுக்குப் பட்டதை பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.</p>
