தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“சத்தியமா நான் பார்க்கல... இல்ல இல்ல, பார்த்தேன்!”

11 Apr 2026, 5:30 am
“சத்தியமா நான் பார்க்கல... இல்ல இல்ல, பார்த்தேன்!”

“சத்தியமா நான் பார்க்கல... இல்ல இல்ல, பார்த்தேன்!”

அரசியலில் பல்டி அடிப்பது சாதாரணமானதுதான். ஆனால், ஒரே விஷயத்தைப் பற்றி ஆளுக்குத் தகுந்த மாதிரி மாற்றிப் பேசுவதில் அ.தி.மு.க பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு தனி ரகம் என்பது உறுதியாகியுள்ளது. தந்தி டிவி (எதிர்) புதிய தலைமுறை கடந்த 2020-ஆம் ஆண்டு தந்தி டிவியில் பேட்டி யளித்தபோது, “நான் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததே இல்லை; அவரைப் பார்க்க முயற்சியும் செய்யவில்லை” என மிகவும் அடக்கமாகத் தெரிவித்தார் எடப்பாடியார். ஆனால், கடந்த 8-ஆம் தேதி ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் பேசும்போது அப்படியே மாற்றிப் பேசுகிறார். “இலங்கை பிரச்சனை வந்தபோது கருப்புச் சட்டை அணிந்து கொண்டு சத்யா ஸ்டூடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்தேன்” என ஒரு புதிய தகவலைத் தட்டியுள்ளார். ‘புரட்டு’த் தமிழரா? 2020-இல் சொன்னது பொய்யா அல்லது இப்போது சொன்னது ‘ரீல்’ தானா என்பது எடப்பாடிக்கே வெளிச்சம். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர் எனக் காட்டிக்கொள்ள அவர் அடித்துள்ள இந்த ‘யூ-டர்ன்’ சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு முன்னாள் ஜனாதிபதியையோ அல்லது முதலமைச்சரையோ பார்த்தது குறித்துக் கூடத் தெளிவான உண்மை இல்லாமல் பேசுவது ஒரு பொறுப்பான தலைவருக்கு அழகல்ல. இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசித் தனது நம்பகத்தன்மையைத் தானே சிதைத்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியை, மக்கள் ‘புரட்சித் தமிழர்’ என்பதா அல்லது ‘புரட்டுத் தமிழர்’ என்பதா என யோசிக்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.