தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் செய்திகள்

10 Jan 2026, 12:25 pm
தீக்கதிர்   செய்திகள்

நான், பேச வேண்டியுள்ளது

நீ வெறும் கிரிக்கெட் ஆட்டக்காரன்தான். வேறு எதையும் பேசாதே என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இந்த வலதுசாரி அரசியல்வாதிகள் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய வெறுப்பையும் அள்ளி வீசுகிறார்கள். சமூகத்தைப் பிரித்து, வெறுப்பை உருவாக்கி, ஆஸ்திரேலிய சமூகத்தில் பகையை உருவாக்குகிறார்கள். அப்போது அதற்கு எதிராக நான் பேசுகிறேன். நான் பேச வேண்டியுள்ளது.  ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர்  உஸ்மான் கவாஜா.

போதைக்கான நுழைவாயில் 100 கோடி

மதிப்பிலான கஞ்சாச் செடிகளைத் திரிபுரா காவல்துறையினர் அழித்திருக்கிறார்கள். ஆனால், இது கண்துடைப்புதான் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். மியான்மரில் இருந்து போதைப் பொருட்கள் பல மாநிலங்களுக்கும் செல்ல நுழைவாயிலாக திரிபுரா மாறிவிட்டது. கஞ்சாச் செடிகள் பயிரிடுவது பெருமளவில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் இந்த நிலைமை. இடது முன்னணி ஆட்சியின்போது இந்த சட்டவிரோதச் செயல்கள் இல்லை.

வாழ்க்கை

சினிமாத்துறையின் சிறப்பு என்னன்னு தெரியுமா.. ஒரு படம் முடிக்கும்போது ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறோம்.  நடிகை ப்ரீத்தி முகுந்தன்

பணக்காரர்களுக்கு எதிராக.. ?!! நாட்டின் “100 கோடி(டாலர்)

பெரும் பணக்காரர்” பட்டியலில் இருந்த எண்ணிக்கை சரிந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் 204 பேர். 2025ல் 176. 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும் பணக்காரர்களின் செல்வக்குவிப்புக்கு வேகத்தடை போட்டு விட்டார்கள் என்பது இதற்குப் பொருள் அல்ல. இந்த நபர்களிலும் குறிப்பிட்ட சிலருக்கு பாரபட்சமாகப் பெரும் சலுகைகள் தரப்படுகின்றன.  முதலிரண்டு இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவரின் செல்வ மதிப்பு அதிகரிக்கவே செய்துள்ளது. அண்மையில் டாடா குழுமத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் தரப்பட்டதும் இந்த பாரபட்ச செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பெண் விவசாயிக்கான சர்வதேச ஆண்டு இந்த ஆண்டை பெண் விவசாயிக்கான

சர்வதேச ஆண்டாகக் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவெடுத்திருக்கிறது. மேலும் இரண்டு கருப்பொருள்களிலும் அனுசரிக்க இருந்தாலும், இது முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.  விவசாயத்துறையில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு, அவர்களின் பங்கேற்பை மேலும் செழுமைப்படுத்துவது ஆகியவற்றை நடப்பாண்டின் இலக்குகளாக எடுத்துள்ளனர். உணவுப்பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வறுமை ஒழிப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு தீர்மானகரமாக இருக்கும் என்பதால் இந்த அனுசரிப்பு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதோடு, தற்போதுள்ள நிலையில் பெண்கள் என்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறார்கள் என்பதை அடையாளங்கண்டு, அவற்றை நிறைவு செய்து தருவது என்பது இலக்காக உள்ளது. மிக முக்கியமாக, விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படாததாகவே உள்ளது. அதைச் சரி செய்யும் முயற்சிகள் நடக்கின்றன.

பணக்காரர்களுக்கு எதிராக.. ?!! நாட்டின் “100 கோடி(டாலர்)

பெரும் பணக்காரர்” பட்டியலில் இருந்த எண்ணிக்கை சரிந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் 204 பேர். 2025ல் 176. 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும் பணக்காரர்களின் செல்வக்குவிப்புக்கு வேகத்தடை போட்டு விட்டார்கள் என்பது இதற்குப் பொருள் அல்ல. இந்த நபர்களிலும் குறிப்பிட்ட சிலருக்கு பாரபட்சமாகப் பெரும் சலுகைகள் தரப்படுகின்றன.  முதலிரண்டு இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவரின் செல்வ மதிப்பு அதிகரிக்கவே செய்துள்ளது. அண்மையில் டாடா குழுமத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் தரப்பட்டதும் இந்த பாரபட்ச செயல்பாடுகளில் ஒன்றாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.