ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது: கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
10 Jul 2026, 9:02 pm
<p><strong>ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது: கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 10- இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பாக தமிழகத்தின் கடல் மற்றும் கடற்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது எனவும், விசைப் படகு மூலம் கரையோர மீன் பிடிப்பை தடை செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து வியா ழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.ராமச்சந்தி ரபாபு, மகேஸ்வரி, நிர்வாகி கள் நம்புராஜன், உமைய வேல், முனியசாமி, சக்தி வேல், அருள்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட தலைவர் எம். சிவாஜி நிறைவுரையாற்றினார். சேரன்கோட்டை, ராம கிருஷ்ணாபுரம், நடராஜ புரம், புதுரோடு சங்குமால், அக்கினி தீர்த்தம், அரி யாங்குண்டு ஆகிய கடற் கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.</p>
