தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அரசியல்கட்சிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

11 Jul 2026, 10:36 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அரசியல்கட்சிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அரசியல்கட்சிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிதம்பரம், ஜூலை 11- கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 4 கிணறுகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிள்ளை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சியினர், கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என முழக்கமிட்டனர். “கடல் வளத்தைச் சூறையாடாதே, மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், உலகப் புகழ்பெற்ற மாங்குரோவ் காடு களையும் மீன்வளத்தையும் அழிக்காதே” என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அப்பகுதி யின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.