ஹைதராபாத்தில் டிரம்ப் பெயரில் சாலை! - சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
2 hours before

ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள ஒரு முக்கிய சாலைக்கு, 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று தெலுங்கானா அரசு பெயரிட்டுள்ளது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா ரைசிங் மாநாட்டின் போது, ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பெயரை சூட்டுவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன்படி, ஹைதராபாத்தின் நிதி மாவட்டமான நானக்ராம்குடாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள ஒரு முக்கிய சாலைக்கு, 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று தெலுங்கானா அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, ஈரான் மீதான போர், காசாவில் இனப்படுகொலை, வெனிசுலாவில் ராணுவத் தலையீடு மற்றும் கியூபாவுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சூழலில், டிரம்ப் பெயரில் சாலை திறப்புக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.