திருச்சி விரைவு செய்திகள்
9 Feb 2026, 3:02 pm

பணியிலிருந்த பெண் ஊழியர் மீது தாக்குதல்: கணவர் கைது

விருதுநகர், பிப்.10- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் பணியாற்றி வந்த பெண் ஆய்வக நுட்பநர் மீது கொடூ ரமாக தாக்குதல் நடத்திய அவரது கணவரை காவல்துறை யினர் கைது செய்தனர். விருதுநகர் அருகே குல்லூர் சந்தை பகுதியைச் சேர்ந்த பாண்டிமீனா (24), அரசு குடும்பன்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான வெற்றிவேல் (26) என்ப வரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களி லேயே இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாண்டிமீனா கடந்த இரண்டு மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆய்வக நுட்பநராக பணியில் இருந்த பாண்டி மீனாவை, திங்களன்று அதிகாலை அங்கு வந்த அவரது கணவர் வெற்றிவேல் சந்தித்துள்ளார். அப்போது இருவ ருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெற்றி வேல் பாண்டிமீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாண்டிமீனா மயக்கம் அடைந்த தைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வெற்றி வேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.

தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீயணைப்பு, மீட்பு பணி பயிற்சி

நாகர்கோவில். பிப், 9- தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணித்துறை டிஜிபி உத்தரவும்படி திங்களன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் தனியார் செக்யூரிட்டி கார்டுகளுக்கு அடிப்படை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிற்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு பகுதியாக நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் தலைமையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட தனியார் செக்யூரிட்டி களுக்கு திங்களன்று பயிற்சி வழங்கப் பட்டது. இதில் உதவி மாவட்ட அலுவலர்கள் துரை மற்றும் பிரதீப் குமார் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 மனுக்கள்

நாகர்கோவில். பிப். 9- குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர்மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், துணை காவல்கண்காணிப்பாளர் சுப்பையா, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மழை இல்லாததால் வறட்சி: நம்பியாற்றில் நீர் வரத்து குறைந்தது

திருநெல்வேலி, பிப்.9- நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் மழை பெய்யாத தால் நீரோடைகள், பாசன குளங்களில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் பிசான பருவத்தில் நெல் மகசூல் செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதி பட்டத்தில் உள்ள நெல் மணிகளை காப்பாற்ற சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதி மக்களின் முக்கிய நீராதரமாக திகழும் வனப்பகுதியில் ஓடுகிற நம்பியாற்றில் சிறிய ஓடையில் ஓடுவதை போல் தண்ணீர் செல்கிறது. வன வனப்பகுதியில் நம்பி கோவிலுக்கு செல்லும் ரோட்டில் உள்ள மோர் மடம் ஓடையில் முற்றிலுமாக தண்ணீர் வற்றியதால் பாறைகளாக காட்சி அளிக்கிறது. வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள தடுப்பணையிலும் நூல் போல தண்ணீர் விழுகிறது. கோடை தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் குறைந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி சாவு

திருநெல்வேலி பிப் 9- நெல்லையை அடுத்த சுத்தமல்லி தான்யா கார்டன் 3-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 78). இவர் கடந்த 2005-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் பணம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்த சுப்பிரமணியன் கடந்த நவம்பர் மாதம் உடல் நலமின்மை காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

அருமனை,பிப். 9- திருவட்டார் மூவற்றுமுகம் பகுதியை சேர்ந்த திபின் பென் சிகர் இவர் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் அருமனை அருகே சிதறாலிருந்து மூவற்றுமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தேமானூர் பாலம் அருகே வரும்போது எதிர்பாராத விதத்தில் எதிரே அதிவேகமாக வந்த திருமண வேன் ஒன்று திபின் பென்சிகர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் திபின் பென்சிகர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திபின் பென்சிகரை மீட்டு அருமனை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடத்தினர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

அறந்தாங்கி, பிப்.9- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் து. சண்முகசுந்தரம், நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் மு. அன்பழகன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா. காளிதாஸ், ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன் சு உள்ளிட்ட பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர், கல்லூரிக் கண்காணிப்பாளர் பா. மகாராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சார்பாக, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

மேலகுமிலங்குளத்தில் நூலகம், சமுதாயக் கூடம் அமைக்க கோரிக்கை

விருதுநகர், பிப்.9- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், இசலி ஊராட்சிக்கு உட்பட்டது மேலகுமிலங்குளம். இங்கு பொது நூலகம் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்விக்குத் தேவையான புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சமுதாயக் கூடம் இல்லாத காரணத்தால், கிராம மக்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீட்டு நிகழ்ச்சி களை நடத்துவதற்கு இடமின்றி சிரமப்படுகின்றனர். எனவே, பொது நூலகம் மற்றும் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் திருவில்லிபுத்தூரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விருதுநகர், பிப்.9- கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன் னிட்டு, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தொழிலாளர் நலத் துறை இணைந்து, திரு வில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கொத்தடிமை ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் பிரச்சார வாகனம் இயக்கப்பட்டது. இப் பிரச்சார வாகனத்தை, விருதுநகர் மாவட்ட சட்டப் பணி கள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.சிவக்குமார், கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி, குடும்ப நீதிமன்ற நீதிபதி, விரைவு மகிளா நீதி மன்ற நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிபதி, விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா ளர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

கவுரவ விரிவுரையாளர்கள் சிவகங்கையில் தொடர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.9- சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் 90க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையா ளர்கள், தங்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிநல கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், குறைந்த ஊதியம் அதுவும் ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவ தால் கடுமையான பொருளாதார சிக்கல் களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ரூ.57,800-ஐ மாத ஊதியமாக வழங்க வேண்டும், 12 மாதங் களும் முழு ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து கௌரவ விரிவுரையாளர் களுக்கும் பிஎப்/இஎப் வசதிகள் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையா ளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரை யாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இரு சுழற்சியிலும் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் வகுப்புகளை புறக்க ணித்து, அறவழியில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையா ளர்கள் பங்கேற்றனர்.

அதிக நெல் விளைச்சல் ஏக்கருக்கு 2,800 கிலோ கொள்முதல் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

இராஜபாளையம், பிப்.9- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை சாதகமாக பெய்த தன் காரணமாக நெல் விளைச்சல் அதிக ரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள னர். தற்போது அரசு நெல் கொள்முதல் நிலை யங்களில், ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 60 மூட்டைகள், அதாவது 2,400 கிலோ நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படு கிறது. ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக உள்ளதால், விவசாயிகளிடம் கூடுதலாக நெல் தேங்கும் நிலை ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த அளவை மீறி விளைந்த நெலுக்கு தனியார் வியாபாரி கள் குறைந்த விலையே வழங்குவதாக கூறப்படுவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க, தமிழக சட்ட மன்றத்தில் முன்பே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 70 மூட்டைகள், அதாவது 2,800 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பாக, இராஜபாளையம் பகுதி நெல் விவசாயிகள் சார்பில் விவசாயி பாலகிருஷ்ணன், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.