எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துங்கள்!
14 Mar 2026, 2:57 pm

எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துங்கள்!

பிரதமர் மோடிக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் கடிதம்

புதுதில்லி, மார்ச் 14 - பொதுமக்கள், தொழிலாளர்கள், மாண வர்கள், சிறு உணவக உரிமையாளர்கள் என அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் சாரம் வருமாறு: சமையல் எரிவாயு பற்றாக்குறையால், நமது மக்கள் தொகையில் பெரும்பகுதியை பாதிக்கும் ஒரு கடுமையான நெருக்கடியை உங்கள் கவனத் திற்குக் கொண்டுவரும் நோக்கில், மிகுந்த மன வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரினாலும், அதன் விளை வாக விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளாலும் உருவாகும் வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் நிலையற்ற தன்மைகளி லிருந்து நாட்டின் நலன்களைப் பாதுகாப்ப தற்குத் தேவையான போதுமான எரிவாயு இருப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தவறி விட்டதாகத் தெரிகிறது. எல்பிஜி விலை உயர்வை மக்கள் மீது சுமத்துவதா? ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் ஆக்கிர மிப்பு நடவடிக்கையானது எரிசக்தி விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்துள்ளது. அரசாங்கம் பலவிதமான கூற்றுகளை முன்வைத்தாலும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மானிய விலையிலும், மானியமற்ற விலையிலும் வழங்கப் படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. பண வீக்கத்தின் பிடியில் சிக்கி ஏற்கனவே பெரும் சுமையுடன் தவித்து வரும் மக்களின் மீது, இது மேலும் ஒரு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. கூடுதல் தண்டனையான எரிவாயு தட்டுப்பாடு இப்போது, இவற்றுக்கெல்லாம் மேலாக, மக்கள் கடுமையான சமையல் எரிவாயு பற்றாக் குறையையும் எதிர்கொண்டு வருகின்றனர். எரிவாயுவை மீண்டும் நிரப்புவதற்காக மக்கள் பதிவு செய்து கொண்டு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தை வியாபாரிகள் மட்டும் கொழித்து வருகின்றனர். வீட்டு உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், கள்ளச்சந்தையில் ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரையிலான விலைகளில் விற்கப்பட்டு வருகின்றன. கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும், உண்மையாகவே தேவைப்படும் அனைத்து தனிநபர்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் உடனடியாக உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிப்பு சமையல் எரிவாயு பற்றாக்குறையின் காரண மாக, பல மாணவர் விடுதிகள் தங்கள் உணவுப் பட்டியலைச் சுருக்கிக் கொண்டுள்ளன. மாண வர்களுக்கு முறையான முழு உணவிற்குப் பதிலாக, வெறும் பருப்பு அல்லது காய்கறிக் கறி மட்டுமே பரிமாறப்படுகிறது. சில இடங்களில், விடுதிகள் முழுமையாக மூடப்பட்டு, மாண வர்கள் தங்கள் வீடுகளுக்கே திரும்பிச் செல்லு மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்த கைய நிகழ்வுகள் மாணவர்களின், குறிப்பாகப் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படா மல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர் விடுதிகளுக்குத் தடையின்றி எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாகத் தகுந்த நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு சமையல் எரிவாயு பற்றாக்குறையானது பல உணவகங்களையும், அலுவலகங்களில் உள்ள கேண்டீன்களையும் பாதித்துள்ளது. சமைத்த உணவை விநியோகிப்பதையே தங்கள் வாழ்வா தாரமாகக் கொண்டுள்ள ‘கிக் பணியாளர்கள்’ (Gig workers) தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். சமையலுக்குப் பயன் படுத்தக்கூடிய மாற்று எரிசக்தி சாதனங்களான ‘இண்டக்‌ஷன் அடுப்புகள்’ மற்றும் மின்சார சமையற்கலன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சமையலுக்குப் பயன்படும் விறகின் விலைகூட நான்கு முதல் ஐந்து மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. சமை யல் எண்ணெயின் விலைகளும் உயர்ந்து வருவ தாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தகன மேடைகளைக்கூட மூட வேண்டிய அவலம் இத்தகைய நிகழ்வுகள் நமது சமூகத்தின் ஏழை - எளிய பிரிவினரை நகரங்களை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நடுத்தர வர்க்கத்தினர் உயர்ந்து வரும் விலை களால் ஏற்படும் கூடுதல் சுமையின் கீழ் சிக்கித் தவித்து வருகின்றனர். மொத்தத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ள போர், நமது நாட்டின் மக்களின் வாழ்வில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எரிவாயு மூலம் இயங்கும் தகன மேடைகள் மூடப்பட வேண்டிய சூழல் நிலவும் இடங்களில், சடலங்களை தகனம் செய்வது கூட கடின மான ஒன்றாக மாறிவிட்டது. கள்ளச் சந்தை வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை இந்தச் சூழலில், தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, பின்வரும் நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்: 1. எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் கள்ளச் சந்தை வியாபாரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். 2. மாணவர் விடுதிகளுக்கு எரிவாயு சிலிண் டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இதன் மூலம், வழக்கமான உணவுப் பொருட்களுடன் சேர்த்து, போதுமான அளவு பருப்பு மற்றும் காய்கறிகள் அடங்கிய சத்தான மற்றும் சமச்சீரான உணவை சமைத்துப் பரிமாற நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். 3. சமையல் எண்ணெய்களின் விலையை முறைப்படுத்தி, கட்டுக்குள் வைத்திருக்க நடவடி கைகள் எடுத்திட வேண்டும். 4. உணவு விநியோகப் பணிகளை நம்பி வாழும் ‘Gig workers’ (தற்காலிகப் பணியா ளர்கள்) தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், அவர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கிட வேண்டும். அத்துடன், சிறு உணவக உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட வும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு எம்.ஏ. பேபி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.