காலமுறை ஊதியம் வழங்கிடுக டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலை
15 Jul 2026, 10:56 pm
<p><strong> காலமுறை ஊதியம் வழங்கிடுக டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலை</strong></p><p>சேலம், ஜூலை 15- டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் சார்பில் மண்டல அளவிலான போராட்டத்திற்கு அறைகூவல் விடுக் கப்பட்டிருந்தது. இதன்ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற உண்ணாநிலை அறப் போராட் டத்திற்கு சங்க சேலம் மாவட்டத் தலை வர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலா ளர் செல்வராஜ், சேலம் மாவட்டச் செய லாளர் விஜயகுமார், தருமபுரி மாவட்டச் பொருளாளர் சி.மணி, வேலூர் மாவட்டச் செயலாளர் கே.கர்ணன், மாவட்டப் பொருளாளர் எண் வேல்முரு கன், திருவண்ணாமலை மாவட்டச் செய லாளர் டி.செல்வகுமார், வேலூர் மாநில துணைச் செயலாளர் வி.ஜெயராமன், பி.சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை நிறைவு செய்து டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத் தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன் நிறைவுறையாற்றினார்.</p>
