கல்வித் துறையை சீர்குலைக்கும் மோடி அரசை எதிர்த்து 20 நாளாக உண்ணாநிலை சோனம் வாங்சுக் உயிருக்கு ஆபத்து ஜூலை 20 நாடு தழுவிய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!
17 Jul 2026, 9:09 pm

கல்வித் துறையை சீர்குலைக்கும் மோடி அரசை எதிர்த்து 20 நாளாக உண்ணாநிலை சோனம் வாங்சுக் உயிருக்கு ஆபத்து ஜூலை 20 நாடு தழுவிய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!

புதுதில்லி / சென்னை, ஜூலை 17 - நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வுகள் முகமையை (NTA) கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புதுதில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் உண்ணாநிலை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புகழ் பெற்ற கல்வி சீர்திருத்தவாதியும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணா நிலை போராட்டம் ஜூலை 17 அன்று 20-ஆவது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், சோனம் வாங்சுக் கின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித் தும், ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கு குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழுவும் மூத்த தலைவர் பினராயி விஜயனும் ஆழ்ந்த கவ லையையும் கண்டனத்தையும் தெரிவித்துள் ளனர். மேலும், சோனம் வாங்சுக்கிற்கு ஆதர வாக ஜூலை 20 அன்று நாடு தழுவிய போராட்டங் களை நடத்துமாறு அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதே நாளில், தமிழகம் முழுவதும் ஒருவேளை உணவு புறக் கணிப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங் களை நடத்த சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன.

சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற இளைய தலைமுறையினரின் இணையவழி இயக்கத்துடன் இணைந்து கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் தில்லியின் ஜாந்தர் மந்தரில் தனது உண்ணாநிலையைத் தொடங்கினார். வெள்ளியன்று 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது உடல் எடையில் 9.5 கிலோகிராம் வரை குறைந்து தற்போது கடுமையான பலவீனம டைந்துள்ளார். இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் சதீஷ் லம்பா, வாங்சுக்கின் உடல்நிலை மிகக் கடு மையான மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டி யுள்ளதாக எச்சரித்துள்ளார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உள் உறுப்புகள் செய லிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவருடன் இணைந்து உண்ணாநிலை மேற்கொண்டு வந்த மாணவர்கள் மிகக் கடுமையான சோர்வு காரணமாக இனி நடக்கக் கூடாது என்றும், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர். தில்லி உயர் நீதிமன்றமும் அவரது உடல்நிலையைத் தினசரி கண்காணிக்குமாறு ஒன்றிய அரசுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது உடல்நிலை குறித்துப் பேசிய சோனம் வாங்சுக், “நான் வெளியி லிருந்து பார்ப்பதற்குப் பலவீனமாக இருக்கலாம், ஆனால் உள்ளுக்குள் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஜூலை 20 அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங் கும் நாளில் நாம் நடத்தவிருக்கும் அமைதியான நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு (Chalo Sansad) மக்க ளின் ஆற்றல் தேவை. ஜூலை 20 வரை நான் எந்த விலையைக் கொடுத் தாவது உயிர் தரித்திருப்பேன். அந்தப் பேரணி தோல்வியடைந்தால் நான் ஆவியாகத்தான் திரும்புவேன்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் சமூகத்தின் ஆதரவு

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஜந்தர் மந்தரில் குவிந்து வருகிறது. எம்.ஏ.பேபி, பிருந்தா காரத், து.ராஜா உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் டிம்பிள் யாதவ், திமுக மூத்த தலைவர் ஆ.ராசா உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து சோனம் வாங்சுக் கைச் சந்தித்து ஆதரவு நல்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, பிடிபி தலை வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேளையில், எழுத்தாளர் அருந்ததி ராய், நசீருதீன் ஷா, ஸ்வரா பாஸ்கர், பிர காஷ் ராஜ், அபய் தியோல், ஜினத் அமன் உள்ளிட்ட மக்கள் சமூகப் பிர முகர்களும் நட்சத்திரங்களும் மாண வர்களின் உரிமைகளுக்காகத் தங்க ளின் குரலைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலை யில், அன்றைய தினம் நடத்தப்படவுள்ள “நாடாளுமன்றம் நோக்கிய பேரணி” இந்திய கல்வித் துறையின் எதிர்காலத் தையும், மாணவர்களின் நீதிக்கான போராட்டத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முதன்மை முக்கியத் துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சோனம் வாங்சுக்கின் உயிர் நாட்டிற்கு விலை மதிப்பற்றது: பினராயி விஜயன்

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “சோனம் வாங்சுக்கின் ஜீவன் இந்த நாட்டிற்கு மிகவும் விலைமதிப்பற்றது. உண்ணாநிலை போராட்டத்தால் அவரது உடல் எடை பெருமளவு குறைந்து, உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையிலும் ஒன்றிய அரசு காட்டி வரும் நிசப்தமும் பாராமுகமும் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் வேதனையையும் ஒரு சமூகப் போரா ளியின் உயிரையும் ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியமாக அணுகக் கூடாது” என்று சாடியுள்ளார்.

மேலும், “அழிவுகரமான மற்றும் முறைகேடுகள் நிறைந்த தற்போதைய தேர்வு முறையைச் சுத்திகரிக்க வேண்டியது நமது நாட்டின் எதிர்காலத் திற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்வு முறை சீர்திருத்தங்களை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வரும் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் களின் மக்கள் இயக்கத்திற்கு எனது முழுமையான ஒற்றுமையையும் ஆதர வையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசு உடனடியாகத் தனது மௌ னத்தைக் கலைத்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் ்வர வேண்டும்” என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய கல்வி அமைச்சரே வெளியேறுக : சிபிஎம்

சோனம் வாங்சுக்கின் உடல் நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவ காரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி வில கக் கோரி உண்ணாநிலை போராட்டத் தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமடைந்து வரு வது ஆழ்ந்த கவலையை அளிக்கி றது. நியாயம் கேட்டுப் போராடும் தலைவர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வரு கிறது. இந்த அலட்சியப்போக்கு அரசா ங்கத்தின் கூருணர்வற்ற தன்மையை யும் எதேச்சதிகாரப் போக்கையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

வினாத்தாள் கசிவு இல்லாத, தூய்மையான தேர்வுகளை நடத்து வதில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வி யடைந்துவிட்டதற்கான அடிப்படை காரணம் ‘2020 தேசிய கல்விக் கொள்கை’ ஆகும். இக்கொள்கை ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் வணிகமயமாக்கவும் ஊக்குவிக்கிறது. இந்த மையப்படுத்தல் போக்கின் காரணமாகவே நாடு முழு வதும் ‘பயிற்சி மையங்கள்’ ஒரு தொழில் போல பெருகுவதற்கு வழிவகுத் துள்ளது. கல்வித் துறையை இந்துத்து வாமயமாக்குவதை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப் பில், முறைகேடுகளும் வினாத்தாள் கசிவுகளும் தவிர்க்க முடியாத மூல காரணங்களாக மாறியுள்ளன.

எனவே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடி யாகப் பதவி விலக வேண்டும். முறை கேடுகளின் இருப்பிடமாக மாறியுள்ள ‘தேசியத் தேர்வுகள் முகமை’ மற்றும் ‘2020 தேசிய கல்விக் கொள்கை’ ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கோரிக்கை களை மீண்டும் வலுவாக வலியுறுத்து கிறது. சோனம் வாங்சுக் மற்றும் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஒற்றுமையுடனும் நிற்குமாறு நாட்டின் அனைத்துக் கிளைகளையும், அக்கறையுள்ள குடி மக்களையும் அரசியல் தலைமைக் குழு கேட்டுக் கொள்கிறது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 20 அன்று நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும்.

தமிழக வெகுஜன அமைப்புகளின் கூட்டுப் போராட்டம்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தானை பதவி நீக்கம் செய்யக் கோரியும், நீட் (NEET), கியூட் (CUET), சிபிஎஸ்இ (CBSE) தேர்வு முறை கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் தில்லியில் 20 நாட்களாகப் போராடி வரும் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் விரிவான இயக்கங்கள் நடத்தப்படவுள்ளன. அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 20.07.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருவேளை உணவு புறக்கணிப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் இதர வடிவங்களிலான ஆதரவு இயக்கங்களை கூட்டு அமைப்புகள் சார்பில் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்களான சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கப் பொதுச்செயலாளர் வீ. அமிர்த லிங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் மற்றும் இந்திய மாணவர் சங்க மாநி லச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அழைப்பில், நீட் முறைகேடு களால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழக உழைப்பாளி மக்களும், மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்ப வேண்டும் என அவர்கள் தங்களது கூட்டறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.