தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்வாதார இயக்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் திருவள்ளூரில் உண்ணாநிலை போராட்டம்

10 Jan 2026, 2:48 pm
வாழ்வாதார இயக்க ஊழியர்களை  பணி நிரந்தரம் செய்யவேண்டும் திருவள்ளூரில் உண்ணாநிலை போராட்டம்
<p><strong>வாழ்வாதார இயக்க ஊழியர்களை &nbsp;பணி நிரந்தரம் செய்யவேண்டும் திருவள்ளூரில் உண்ணாநிலை போராட்டம்</strong></p> <p>திருவள்ளூர், ஜன.10- &nbsp;தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜன. 10) திருவள்ளூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களில், கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பட்டதாரிகள் மற்றும் இதில் 90 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் காலை உணவுத் திட்டம், மகளிர் குழுக்க ளுக்கு வங்கிக் கடன் பெற்றுத் தருதல், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்க ளுக்கு வேலை பெற்றுத் தருதல் மற்றும் தாயுமானவர் திட்டக் கணக்கெடுப்பு என அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக ளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணி யாளர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள். ஏற்கனவே நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும், பேச்சு வார்த்தையில் உரிய தீர்வு ஏற்படாத நிலையில், 5-வது நாளான சனிக்கிழமை திரு வள்ளூர் டோல்கேட் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் சார்பில் இந்த உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. பணிநிரந்தரம், கால முறை ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம், ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்துதல் மற்றும் பெண் பணி யாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். இதற்குச் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.சீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.காந்திமதிநாதன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் ஒருங்கி ணைப்பாளர் இ.வெண்ணிலா, சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டத் தலைவர் டி.எசேக்கியல் ஏகாம்பரம், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏ.வி.ஹோமேஸ்வரன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.