மதுராந்தகத்தில் உண்ணாவிரத போராட்டம்
4 hours before
<p><strong>மதுராந்தகத்தில் உண்ணாவிரத போராட்டம்</strong></p><p>தலைநகர் தில்லியில் போராடிவரும் மாணவர் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் , சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ச. ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விறக்கி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி வி. பொன்னுசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கே.வனிதா விவசாயிகள் சங்க நிர்வாகி எம்.ஜெகன்நாதன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இரா.சதிஷ், சிஐடியு மாவட்ட தலைவர் பி.மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, வட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன், சசிக்குமார் இந்திரா, மாணவர் சங்க நிர்வாகிகள் அஜய், சஞ்சய் உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
