முந்தய பக்கம்

பண மோசடியில் ஈடுபட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உண்ணாநிலை

25 Nov 2025, 3:29 pm
பண மோசடியில் ஈடுபட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உண்ணாநிலை
<p><strong>பண மோசடியில் ஈடுபட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உண்ணாநிலை </strong></p> <p>சேலம், நவ.25- நிலத்தில் முதலீடு செய்தவர்களிடம் பல கோடி &nbsp;ரூபாய் பண மோசடி செய்த நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாநிலையை துவக்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 3500க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடி செய்த வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவ லப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார், 36 மேலாளர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர். இந்நிலையில், பொதுமக்களிடம் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமா கவோ, பணமாகவோ திரும்ப பெற்றுத் தர வேண்டும். தற்போது ஈரோட்டில் செயல்படும் எஸ்.ஆர்.எம் பில் டர்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். தமிழ் நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். பண மோசடியில் ஈடு பட்ட அனைவரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நல சங்கத்தினர் சேலம் கோட்டை &nbsp;மைதானத்தில் உண்ணாநிலையை துவங்கியுள்ளனர். சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் போராட்டத்தை &nbsp;வாழ்த்தி பேசினார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் நல சங் கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram