பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது! பறவைகளைக் காப்பாற்ற கோவை சதாசிவம் அழைப்பு
31 Jan 2026, 5:27 pm
<p><strong>பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது! பறவைகளைக் காப்பாற்ற கோவை சதாசிவம் அழைப்பு</strong></p>
<p>திருப்பூர், ஜன.31– மனிதர்கள் இல்லாத உலகத் தில் பறவைகள் வாழ முடியும் ஆனால் பறவைகள் இல்லாத உல கில் மனிதர்கள் வாழ முடியாது என்று பறவைகள் நிபுணர் சலீம் அலி கூறியதை சுட்டிக் காட்டி பற வைகளைப் பாதுகாக்க வேண்டும் என சூழலியலாளர் கோவை சதா சிவம் கூறினார். திருப்பூர் புத்தகத் திருவிழா வில் வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில், ‘பறவைகளோடு பேசுங்கள்’ என்ற தலைப்பில் கோவை சதாசிவம் பேசியதாவது: பறவைகளோடு நம் குழந்தைகள் பேச வேண்டும். டைம் இதழ் 13 பெண்களில் ஒரு பெண்ணைத் தேர்வு செய்து விருது கொடுத்தி ருக்கிறது. அவர் பெயர் பூர்ணிமா தேவி பர்மன். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது பாட்டியால் வளர்க்கப்பட்டவர். அந்த மூதாட்டி ஒரு விவசாயி. அவர் பூர்ணிமா வுக்கு பறவைகளை அறிமுகம் செய்து வைக்கிறார். ஹார்கிலா எலும்பு விழுங்கும் நாரை என்று ஒரு பறவையை காட்டுகிறார். நெஞ்சில் சிகப்பு காற்றுப்பை இதயம் கடிகா ரம் பெண்டுலம் போல் அசைகிறது. அழுகிய சதைகளை எலும்பை சாப் பிட்டு தரையில் சுத்தம் செய்கிறது. அந்த பறவையை நேசிக்கிறாள் பூர் ணிமா. அப்பகுதி மக்கள் அங்கிருந்த மரத்தை வெட்டியதால் எலும்பு விழுங்கும் நாரையின் கூடுகள் தரையில் விழுந்து சிதறுகின்றன. குஞ்சுகளும் சிதறிப்போய் செத்துப் போகின்றன. அசாம் மக்களுக்கு அந்த பறவை ஒரு பேய், அது கெட்ட சகுணத்தின் அடையாளம் என்ற நம்பிக்கை உள்ளது. மனிதர்கள் பொறுப்பற்று வீசிகிற இறைச்சி கழிவுகளை சுத்தம் செய்யும் அந்த பறவை பற்றி பூர்ணிமா ஆய்வு செய்கிறார். விலங்கியல் படித்துப் பின் உயிரியல் படித்து முனைவர் பட்டம் வாங்குகிறார். ஒரு காலத் தில் ஆயிரக்கணக்கில் இருந்த அந்த பறவைகள், படிப்படியாக அழிக்கப்பட்டு வெறும் 300 பறவை கள் மட்டுமே மிஞ்சின. அந்த பறவை இருந்தால்தான் மரங்கள் துளிர்க் கும் என்பதை அறிந்து அந்த பறவை களை பாதுகாத்து வளர்க்கிறார் பூர்ணிமா. இப்போது அந்த பறவை கள் எண்ணிக்கை 1800 ஆக அதிக ரித்துள்ளது. இதுதான் பறவைக ளோடு பேசுவது. இதற்காகத்தான் பூர்ணிமாவுக்கு பசுமை ஆஸ்கர் விருது கிடைக்கிறது. கடந்த டிசம் பர் மாதம் ஐ.நா.சபை விருது வழங்கியது. டைம் பத்திரிகை பூமியின் சாம்பியன் என்று விருது வழங்கியுள்ளது. அதேபோல் ராஜஸ்தானில் வலசை வரும் பறவைகளுக்கு ஒரு ஏழை விவசாயி நூறு கிலோ மூட்டை யில் கோதுமையைத் தூவி உண விடுகிறான். வலசைப் பறவைகள் சாப்பிட தண்ணீர் வைக்கிறான். பறவை எச்சம் இரண்டரை மாதம் களித்து, கோதுமை வயலாக விளை கிறது. 100 மூட்டை கோதுமை அறு வடை செய்கிறார். பறவைகளின் எச்சத்தில் ஒரு காடு இருக்கிறது. மொரிசீயஸ் தீவில் டோலோ என்ற பறவைகளை டச்சுக்காரர்கள் அழித்தனர். இன்று அந்த இனமே அழிந்து போனது, அதனால் அங்கி ருந்து கல்வாரி மரங்களும் அழிந்து போயின. டோலோ பறவை அழிந்து 400 ஆண்டுகளுக்குப் பிறகு கல் வாரி மரங்கள் எதுவும் இல்லை. ஒரு பறவையை இழப்பது ஒரு மரத்தை தாவரத்தை இழப்பதாகும். நவீன கருவிகளை கண்டு பிடிக்கும் நமக்கு ஒரு பட்டாம்பூச்சி யையோ, தேன் பூச்சியையோ உரு வாக்க முடியாது. நாம் வாழும் இப் பகுதியில் காக்கை குறைந்து வருகி றது. நாம் பறவைகளை பாது காக்க வேண்டும். மனிதர்கள் இல் லாத உலகில் பறவைகள் வாழும். பறவைகள் இல்லாத உலகில் மனி தர்கள் வாழ முடியாது என்று சலீம் அலி கூறியிருக்கிறார். எனவே பற வைகளோடு பேசுவோம், பறவை களை பாதுகாப்போம், அதன் மூலம் இந்த பூமியை பாதுகாப் போம் என்று கோவை சதாசிவம் கூறினார். முன்னதாக வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பில் கவி தாசன் உரையாற்றினார். அவர் கூறும்போது, சட்டம் பேசினால் வழக்கு நடத்தலாம், வாழ்க்கை நடத்த முடியாது. புரிதல் இருந் தால், பிரிதல் இருக்காது. ஆனால் எப்படிப் புரிந்து கொள்வது? நம் துணைவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற புரிதல் இருந்தால் பிரிதல் இருக் காது. குறையே இல்லாத மனிதன் இல்லை, குறையை மட்டும் பார்ப்ப வன் மனிதனே இல்லை. சமுதா யத்தில் மதிப்பு பெற நல்ல பண்பு வேண்டும். போவது போகட்டும், நெஞ்சம் புனிதமாகட்டும். நமக் குள் உட்போராட்டம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். மனதை சுத்தப்படுத்துவது புத்த கங்கள். வீழ்ந்து கிடக்கும் சமுதா யத்தை தூக்கிவிட செயல்படுங் கள். தொட்டு தொட்டு பார்த்தால் வெறும் காகிதம், தொடர்ந்து படித் தால் அது ஆயுதம், என்றார். முன்னதாக டி.கே.டி. கல்விக் குழுமத்தின் என்.ஷகிலா பர்வீன், யுனிவர்சல் பள்ளிக்குழுமத் தலை வர் சாவித்திரி ராஜகோபால், அம் மன் பேஷன் சிவக்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முடி வில் த.திலக் நன்றி கூறினார்.</p>
<p> </p>
