வனவிலங்கு – மனித மோதல்: அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை!
2 Oct 2026, 1:16 am

வனவிலங்கு – மனித மோதல்: அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை!

மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில்கொஞ்சும் அடிவாரப் பகுதிகளான திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்கள், தற்போது, விவசாயிகளின் அச்சத்துக்கான மையப்புள்ளிகளாக மாறியுள்ளன. மக்காச்சோளம், தென்னை, கரும்பு, காய்கறிகள் என பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வரும் அடிவாரப்பகுதி விவசாயிகள், தொடர்ச்சியாக வனவிலங்குகளின் ஊடுருவலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பயிர் சேதம் ஒருபுறமிருக்க, உயிர்பலி மற்றும் படுகாயங்கள் போன்ற நிகழ்வுகளால் விவசாயிகளின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் நிலவும் நீர் மற்றும் உணவு பற்றாக்குறை, குறிப்பாக, கோடை மற்றும் வறட்சிகாலங்களில் யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகளை வனத்தை விட்டு வெளியேறத் தூண்டுகிறது.இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகள், பல மாத உழைப்பையும் முதலீட்டையும் ஒரே இரவில் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் மீள முடியாத கடன் சுமைக்கு தள்ளப்படுகின்றனர். வயல்வெளிகளில் இரவு நேர காவல் மற்றும்அதிகாலை விவசாயப் பணிகளின் போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் நிலவுவதால், விவசாயிகள் அச்சத்திலேயே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கைக்கொடுக்காத நடைமுறைகள்தற்போது வனத்துறையும் அரசும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெரும்பாலும் ’சம்பவம் நடந்தபின் செயல்படும்’ தற்காலிக தீர்வுகளாகவே உள்ளன. வனவிலங்குஊடுருவிய பின் விரட்டுவது, அரைகுறையாக பராமரிக்கப்படும் மின்வேலிகள், நீண்ட கால தாமதத்திற்குப்பின் வழங்கப்படும் சொற்ப நிவாரணங்கள் போன்றவை பிரச்சனைக்கு முழுமையான முடிவை கொண்டுவரவில்லை. அரசு மற்றும் வனத்துறை இதற்கான தீர்வை அறிவியல் பூர்வமாக சிந்தித்து செயல்படுத்துவதற்கு மாறாக, அப்போதைக்கான தற்காலிக தீர்வுகளையே முன்னெடுக்கிறது என்ற ஆதங்கம் விவசாயிகள் மத்தியில் வலுத்துள்ளது.

அறிவியல் பூர்வமான தீர்வுகள்இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், மனித-வனவிலங்கு மோதலை முற்றிலுமாக தவிர்க்கவும், இரண்டு தரப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வனத்திற்குள் செயற்கை நீர்தொட்டிகள் அமைத்து, சோலார் பம்புகள் மூலம் வறட்சிக் காலங்களிலும் நீர் இருப்பை உறுதி செய்யவேண்டும். வனத்திற்குள் வேகமாக பரவி, விலங்குகளின் உணவாதாரத்தைப் பாதிக்கும் ’சீமைக்கருவேலம்’ மற்றும் ’உண்ணிச் செடி’போன்ற தாவரங்களை முழுமையாக அகற்றி, யானைகளுக்கு பிடித்த மூங்கில், புல் வகைகள் மற்றும் பழமரங்களை அடர்த்தியாக நட்டு வளர்க்க வேண்டும்.

வனவிலங்குகளின் நகர்வுகளை கண்காணிக்க ’SatelliteCollar’ மற்றும் எல்லைப்பகுதிகளில் ஏஐ திறன் கொண்ட கேமராக்களை பொருத்த வேண்டும். விலங்குகள் வன எல்லையைக் கடக்கும்போதே ஒலிபெருக்கி மற்றும் குறுஞ்செய்தி மூலம் விவசாயிகளுக்கு தானாக எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்ப நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சூரிய மின்வேலிகள் மற்றும் அகழிகளை அமைப்பதோடு நிறுத்திவிடாமல், அவற்றை தொடர்ச்சியாக பராமரிக்கதனிப் படைகளை நியமிக்க வேண்டும். எல்லைப் பகுதிகளில் விலங்குகளுக்கு பிடிக்காத கத்தாழை, எலுமிச்சை, கரும்பு அல்லாத காரமானபயிர்கள் அல்லது ’தேன் ஈ வேலி’(Beehive Fencing - யானைகள்தேனீக்களுக்கு அஞ்சும் இயல்புடையவை) போன்ற இயற்கை அரண்களை உருவாக்க ஊக்குவிக்கலாம்.

சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழப்பு/காயங்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையைஉயர்த்துவதுடன், காலதாமதமின்றி ’ஒற்றைச் சாளர செயலி’ மூலம் 15 நாட்களுக்குள் நேரடியாகவிவசாயிகளின் வங்கிக் கணக்கில்சேர வழிவகை செய்ய வேண்டும். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளுக்கென தனியாக நவீனஉபகரணங்களுடன் கூடிய வனத்துறை மீட்புக் குழுக்களை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றனர்.வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் சுருங்குவதும், காலநிலை மாற்றமும் தான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணம். வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் அவசியமானது என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என்பதே அணைவரின் எதிர்பார்ப்பாகஉள்ளது.(ந.நி)